மஹிந்த
அரசாங்கத்திலும்
அலரி
மாளிகையில் திருமணம்
வாயடைத்துப்
போன கூட்டணியினர்
கடந்த மஹிந்த அரசாங்கத்திலும் அலரி மாளிகையில் திருமணம்
வைபவம் இடம்பெற்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர
சேனாரத்னவின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றமை குறித்து சர்ச்சை
ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில்
கடந்த அரசாங்கத்திலும், அலரி மாளிகையில் திருமணம் நடந்துள்ளதாக ஆளும் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
சுயாதீன தொலைகாட்சியின் ஊடகவியலாளரான ஹசந்தர
ஹெட்டிஆராச்சியின் திருமண நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளதாக
புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சாட்சி
கையொப்பம் பெறும் நடவடிக்கை மாத்திரமே அலரி மாளிகையில் இடம்பெற்றதாகவும், இதன்போது நெருக்கமான உறவினர்கள் மாத்திரமே
அழைக்கப்பட்டதாகவும் ஹசந்தர ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
தான் அந்த காலப்பகுதியில் பரபரப்பான வேலைகளில் இருந்ததாகவும்,
திருமண கையொப்பம்
பெற்றுக் கொள்வதற்காக இந்த தம்பதி அலரி மாளிகைக்கு வந்ததாகவும், அவர்களுக்கு திருமணம் நிகழ்வு நடத்தப்படவில்லை
எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தின் முதல் மாதங்களில் மாகாண சபைத் தேர்தல்
நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய
திருமணத்தை தேர்தல் மேடைகளில் பயன்படுத்த, கூட்டு எதிர்க்கட்சியினர் திட்டமிருந்தனர்.
0 comments:
Post a Comment