ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு
தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்ய கோரிய அனுமதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம்
இன்று நிராகரித்துள்ளது.
பொதுபலசேனா
அமைப்பின் பொதுச்
செயலாளர் கலகொட
அத்தே ஞானசார
தேரருக்கு விதிக்கப்பட்ட
கடூழிய சிறைத்தண்டனைக்கு
எதிராக மேன்முறையீடு
செய்வதை, மேன்முறையீட்டு
நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கலகொட அத்தே ஞானசார தேரர், தமது சட்டத்தரணி ஊடாக, இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதன்போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், பிரிதீ பத்மன் சூரசேன மற்றும் சிரான் குணரத்ன, ஆகியோரே கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர்.
குறித்த
மேன்முறையீட்டுக்கு அனுமதி வழங்குவதா
இல்லையா என்பது
தொடர்பில் மேன்முறையீட்டு
நீதிமன்ற தலைவர்
ப்ரீதி பத்மன்
சூரசேன உள்ளிட்ட
நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்ட
போதே இந்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை
அவமதித்த குற்றச்சாட்டுக்கு
அமைவாக ஞானசார
தேரருக்கு அண்மையில்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆறு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும்
எதிர்காலத்தில் ஞானசார தேரர் சார்பில் உயர்
நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக
பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய
கந்த தேரர்,
இந்த தீர்ப்பிற்கு
பின்னர் ஊடகங்களிடம்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment