புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்
இன்பராசாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்களிடத்தில் இருப்பதாக அண்மையில் கருத்து வெளியிட்ட புனர்வாழ்வு பெற்ற விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவுக்கு எதிராக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸில், இனங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தல் என்ற காரணத்தின் படி CIB 3 - 201/243 என்ற இலக்கத்தின் கீழ் இம்முறைப்பாடானது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓட்டமாவடியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் நேற்று இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment