குடியிருப்பு காணிகளில் அத்துமீறி எல்லை போடுவதை
நிறுத்த வேண்டும் எனக் கோரி
திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக

கப்பல் துறை கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலை மாவட்டம் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கப்பல் துறை கிராம மக்கள் தங்களது குடியிருப்பு காணிகளில் அத்துமீறி எல்லை போடுவதை நிறுத்த வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
எங்களது குடியிருப்பு பகுதிகளில் கிணறு, வீடு அமைத்து சுதந்திரமாக வாழ விடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் அப்பகுதியில் உள்ள அல் அக்ஸா பள்ளி காணிக்குள்ளும் எல்லையிடப்பட்டுள்ளன. இதனை உரியவர்கள் நிறுத்தி தாங்கள் சுதந்திரம் உள்ளவர்களாக வாழ வழி விடுங்கள் எனவும் கோரியுள்ளனர்.
தொடர்ந்தும் இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றுக் கொட்டிருந்த சந்தர்ப்பத்தில் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது.
மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களை உள் நுழைய விடாது பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் கடும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top