எப்போதுமே புலிகளுக்கு எதிராக பேசிய நல்லவர்!
தன்னை தேடி வந்த பிரபலம் குறித்து மஹிந்த புகழாரம்

தன்னை சந்திப்பதற்கு இந்தியாவிலிருந்து வந்த பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குறித்து மஹிந்த சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் தமது கருத்துக்களை மஹிந்த பதிவிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நான் எனது நல்ல நண்பனான டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு மெதமுலையில் வரவேற்பளித்தேன்.
இதன்போது புதுடில்லிக்கு வருமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன்.
இவர் இலங்கையின் நீண்ட கால நண்பன். எப்போதுமே விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக தீவிரமாக பேசியவர்.
அவர் எப்போதும் இலங்கையின் நலன் தொடர்பாக மனதளவில் மிகவும் அக்க்றை கொண்டிருந்தார். ” என பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி குறித்த மஹிந்த புகழாரம் சூட்டியுள்ளார்.







Tweets


  1. I welcomed my good friend Dr. Subramanian Swamy to Medamulana today & am honoured to accept his invitation to speak in New Delhi. A long-time friend of Sri Lanka who has always so vehemently spoken out against LTTE terrorism, he has always had ’s best interest at heart.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top