பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் மீண்டும்
சிறைச்சாலை  மருத்துவமனைக்கு

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் , கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று மீண்டும் சிறைச்சாலை  மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் ஏற்பட்ட சிறுநீர் தொற்று நோய் காரணமாக  அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து சிறி ஜயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் , ஞானசார தேரருக்கு  அண்மையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top