113  எம்பிக்களின் ஆதரவை
 திரட்ட முடியாத சூழ்நிலை
திரிசங்கு நிலைமையில் ராஜபக்ஸவினர்!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரசார சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படங்களை உள்ளடக்க வேண்டாம் எனவும் ராஜபக்ஸ குடும்பத்தினரின் புகைப்படங்களை மட்டும் உள்ளடக்குமாறும் அந்த முன்னணியின் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைய மஹிந்த மற்றும் மைத்திரியின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தீர்மானத்திற்கு அமைய மஹிந்த ராஜக்ஸ, பசில் ராஜபக்ஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரின் புகைப்படங்களை உள்ளடக்கிய சுவரொட்டிகளை நாடு முழுவதும் ஒட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்திற்கு தேவையான 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பணத்தை கொடுத்து திரட்ட முடியாத சூழ்நிலையில், ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ராஜபக்ஸவினருக்கு கிடைத்துள்ள நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புகைப்படங்கள் அடங்கிய பெரிய பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பிலும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீறி செல்லும் விதமான எந்த சந்தர்ப்பமும் ராஜபக்ஸவினருக்கு வழங்கப்பட கூடாது என மைத்திரி தரப்பு தீர்மானித்துள்ளதாகவும் இதற்கு அமையவே ஊடகத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வழங்காது ராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது.








0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top