113 பேரின் சத்தியக் கடதாசிகளுடன் ஜனாதிபதியை
இன்று காலை சந்திக்கிறது
ஐக்கிய தேசியக் கட்சி
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவை இன்று முற்பகல் ஐக்கிய
தேசியக் கட்சி
மீண்டும் சந்திக்கவுள்ளதாக,
அந்தக் கட்சியின்
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி
செயலகத்தில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக்
கூட்டத்தின் பின்னர், கருத்து வெளியிட்ட போதே
அவர் இதனைத்
தெரிவித்தார்.
”
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட
பிரதமர் மஹிந்த
ராஜபக்ஸவுக்கு, நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின்
பெரும்பான்மை ஆதரவு கிடையாது.
இன்று
காலை 10 மணிக்கு,
113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் சத்தியக்கடதாசிகளுடன்
ஜனாதிபதி செயலகத்தில்,
ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளோம். இதனை அவருக்குத் தெரிவித்துள்ளோம்.”
என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment