2 அமைச்சர்களும் 1 இராஜாங்க அமைச்சரும்
இன்று சத்தியப்பிரமாணம்
புதிய
அமைச்சர்கள் இருவரும் , இராஜாங்க அமைச்சர் ஓருவரும்
சற்று முன்னர்
ஜனாதிபதி செயலகத்தில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி
ஊடகப்பிரிவு விடுத்துள்ள இந்த அறிக்கையில் திரு
சமல் இராஜபக்ஷ
சுகாதாரம் போசாக்கு
மற்றும் சுதேச
வைத்தியத்துறை அமைச்சராகவும் , திரு எஸ்பி திசாநாயக்க
பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும்
திருமதி பவித்திராதேவி
வன்னியாராச்சி பெற்றோலியவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராகவும்
ஜனாதிபதி முன்னிலையில்
இன்று (07) பதவிப்பிரமணம்
செய்துள்ளனர்.
Hon. Chamal Rajapaksa: Minister
of Health, Nutrition and Indigenous Medicine
Hon. S.B. Dissanayake: Minister
of Highways and Road Development
Hon. Pavithra Wanniarachchi:
State Minister of Petroleum Resources Development
அதேவேளை,
கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட
அமைச்சரவைப் பேச்சாளர்களான மகிந்த சமரசிங்கவும், கெஹலிய
ரம்புக்வெலவும், எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னதாக, அனைத்து அமைச்சர்களும் நியமிக்கப்படுவார்கள்
என்று தெரிவித்திருந்தனர்.
13 அமைச்சுக்களுக்கான
அமைச்சர்கள் நியமிக்கப்படாமல் இருப்பது குறித்து ஊடகவியலாளர்
ஒருவர் கேள்வி
எழுப்பிய போதே
அவர் இதனைத்
தெரிவித்திருந்தார்.



0 comments:
Post a Comment