இரண்டு பஸ்கள் நேருக்கு நேர்
மோதிய விபத்தில் 47 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில் சம்பவம்
ஜிம்பாப்வே
நாட்டில் எதிர்
எதிரே வந்த
2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிய
விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க
நாடுகளில் ஒன்றான
ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே
நகருக்கு செல்லும்
சாலையில், எதிர்
எதிரே வந்த
இரண்டு பஸ்கள்
நேருக்கு நேர்
மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து
அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு
தகவல் அளித்தனர்.
பொலிஸார்
மற்றும் மீட்புக்குழுவினர்
உடனடியாக அந்த
இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை
மீட்டு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும்,
பலர் படுகாயங்களுடன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால்
உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



0 comments:
Post a Comment