ஒரு
நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 கோடி!
இலங்கையில்
களைகட்டும் அரசியல் பேரங்கள்
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஸவின்
அரசாங்கத்திற்கு 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உறுதிப்படுத்த, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க ஒரு
நாடாளுமன்ற உறுப்பினருக்கு 50 கோடி ரூபாய் பேரமாக பேசப்படுவதாக இன்று
நாடாளுமன்றத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று கூடிய ரணில்
விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி, பிரதியமைச்சர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சர்
பதவிகளுடன் 50 கோடி ரூபாய் வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேரம்
பேசப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
எஸ்.எம்.மரிக்கார், புத்திக பத்திரன,
பாலித ரங்கே பண்டார,
ஹர்சன ராஜகருண உட்பட
பலருக்கு இலஞ்சம் கொடுத்து அரசாங்கத்தில் இணைத்து கொள்ள பேரம் பேசப்பட்டுள்ளது.
ராஜபக்ஸ அணியில் இணைந்து கொண்டால், தமக்கு 2.8 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும்
எனக் கூறி தனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாக பாலித ரங்கே பண்டார இதன் போது
தகவல் வெளியிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment