மைத்திரி - மனோ கணேசன் திடீர் சந்திப்பு!
அரசாங்கத்தில் இணைய முடியாது
 என நேரடியாக தெரிவிப்பு


நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக மனோ கணேசன் தலைமையில், ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாக கூறி விட்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படுகின்ற விடயமாக கட்சி உறுப்பினர்களை பேரம் பேசும் விடயம் காணப்படுகின்றது.

காலையில் ஒரு கட்சியில் இருப்பவர்கள் மாலையில் வேறு கட்சியில் இணைந்து அமைச்சுப்பதவிகளில் இருக்கின்றமை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

எதிர்பார்க்க முடியாத கட்சித்தாவல்களும், பேரம் பேசும் நடவடிக்கைகளும் அடுத்தடுத்து நடைபெறுகின்றன.

இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போட்டியாகவே இது அமைந்துள்ளது.

அந்த வகையில் இரு பிரிவுகளாக உள்ள மைத்திரி - ரணில் அரசும், ரணில் தலைமையிலான .தே.கட்சியும் தமது பெரும்பான்மையை நாடாளுமன்றில் நிரூபிப்பதற்கு தயாராகி வருகின்றன.

அதற்காகவே இந்த பேரம் பேசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் இழுப்பதே இவர்களது முக்கிய தேவையாக உள்ளது.

அந்த வகையில் அண்மையில் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரி - மஹிந்த தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து தற்போது முன்னாள் அமைச்சர் மனோ கணேசனின் பக்கம் இவர்களது பார்வை திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் அரசாங்கத்தில் இணைய முடியாது என நேரடியாக கூறி விட்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Tweet @ManoGanesan
நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு (6) எம்பிக்களும் ஒரு குழுவாக எனது தலைமையிலேயே, ஜனாதிபதி மைத்திரியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலே சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது நேரடியாக கூறி விட்டோம்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top