மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிப்பு




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிதாக  நியமிக்கப்பட்ட பிரதமர் ஹிந்த ராஜபக்வுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளித்துள்ளது.

நாடாளுமன்ற அவைத் தலைவர் என்ற முறையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் கையெழுத்திட்டு, சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக, லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 46 (1) மற்றும் 48 ஆகிய பிரிவுகளின் அடிப்படையில், பதவியில் உள்ள பிரதமர்  இறந்து போனால், பதவி விலகினால், நாடாளுமன்ற  உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால்,  அல்லது, அரசாங்க கொள்கை அறிக்கை. அல்லது  வரவுசெலவுத் திட்டம், தோற்கடிக்கப்பட்டால்,  அல்லது அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்கடிக்கப்பட்டால்  மாத்திரமே, பிரதமர்  பதவி வெற்றிடமாகும்.

அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மீது அவ்வாறு நம்பிக்கையில்லைஎன்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நேற்று காலை ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள்காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், மேற்படி கட்சிகளின், 118 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், ஹிந்த ராஜபக் பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு்ம், அதற்குப் பின்னரான நியமனங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்தில் ஒப்பமிட்டு, சபாநாயகரிடம் அதனைக் கையளித்தனர்.

ஹிந்த ராஜபக்வைப் பிரதமராக நியமித்து, ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட  வர்த்தமாணி அறிவித்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா முன்மொழிந்த இந்த தீர்மானத்தை சம்பிக்க ரணவக்க வழிமொழிந்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top