, “ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக
நாடாளுமன்றத்தை தான் கலைக்கப் போவதில்லை ”
என்ற ஜனாதிபதியின் உறுதி மொழியும்
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட
செய்தியும் பொய்த்துப் போனனது
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை தான் கலைக்கப்
போவதில்லை ” என ஜனாதிபதி உறுதியளித்தார்
நேற்று முன்தினம் இரவு நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் லக்ஸ்மன் பியதாய தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தை தான் கலைக்கப் போவதில்லை ” என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
பெருமளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் முறையாக தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதால், முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்தால், அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போகும் என்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்குவதற்காக, முன்கூட்டியே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிலர் அச்சமூட்டுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதற்காக பெருமளவு பணம் வழங்கப்படுகிறது.
ஆனாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியோ அதனைச் செய்யவில்லை” என்றும் ஜனாதிபதி கூறினார் ” எனவும், லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம்
வெளியிட்ட செய்தியும் பொய்த்தலானது
வெளியிட்ட செய்தியும் பொய்த்தலானது
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குழுக்கள் செய்திகளைப் பரப்பி வருகின்றன.
இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் வலியுறுத்திக் கூறுகிறது.
இந்த போலியான, அடிப்படையற்ற வதந்திகளை அரசாங்கம் முற்றாக மறுக்கிறது” என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

0 comments:
Post a Comment