நீதிமன்ற உத்தரவுப்படி
மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின்
அதிபராக மீண்டும் முபாறக் கடமையேற்பு



மூதூர் வலயக்கல்வி அலுவலகத்துக்கு இணைப்புச்செய்யப்பட்ட முன்னாள் மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபர் எம்.எல்.எம்.முபாறக் மீண்டும் தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரிக்கு இன்று(05) அதிபராக கடமையேற்றுக் கொண்டார்.

அரசியல் பழிவாங்கல் ஊடாக மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றி வந்த இவர் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இணைப்புச் செய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையில் தனது இடமாற்றம் முறையற்றது என மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி திரு.இளஞ்செழியன் அவரை உடனடியாக குறித்த பாடசாலைக்கு மீள இணைக்குமாறு தீர்ப்பளித்ததிற்கமையவே அதிபர் முபாறக் தமது கடமைகளைப் இப்பாடசாலையில் மீண்டும் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top