அமைச்சரவையில் இல்லாதவர்
எப்படி அமைச்சரவைப் பேச்சாளரானார்?
ஊடகவியலாளர் கேள்வி? மொட்டையாகப் பதில்!
அமைச்சரவையில்
இடம்பெறாத ஒருவர்
எப்படி அமைச்சரவைப்
பேச்சாளராக இருக்க முடியும் என்று, நேற்று
நடந்த அமைச்சரவை
முடிவுகளை அறிவிக்கும்
ஊடக மாநாட்டில்
செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், அதற்கு
விளக்கமளிக்க முடியாமல், அமைச்சரவைப் பேச்சாளர்கள் தடுமாறினர்.
ஊடக
மற்றும் டிஜிட்டல்
உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சரான கெஹலிய ரம்புக்வெலவும்,
அமைச்சர் மகிந்த
சமரசிங்கவும், நேற்று முன்தினம் அமைச்சரவை இணைப்
பேச்சாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
நேற்று
இவர்கள் இருவரும்,
இணைந்து வாராந்த
செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
இதன்போதே,
இராஜாங்க அமைச்சராக
இருக்கும் கெஹலிய
ரம்புக்வெல, எப்படி அமைச்சரவை இணைப் பேச்சாளராக
இருக்க முடியும்
என்று, ஊடகவியலாளர்
ஒருவர் கேள்வி
எழுப்பினார்.
அதற்கு,
அமைச்சர் மகிந்த
சமரசிங்க பதிலளிக்கையில்,
“ ஊடகத்துறை அமைச்சுக்கு ஜனாதிபதி பொறுப்பாக இருந்தாலும்,
ரம்புக்வெல இணை அமைச்சரவைப் பேச்சாளராக செயற்படுவார்
என்று மொட்டையாகப்
பதிலளித்தார்.

0 comments:
Post a Comment