புதிய அரசாங்கத்துக்கான அமைச்சரவையில்
இன்னும் சிலர் இன்று பதவிப்பிரமாணம்
அமைச்சர்கள் சிலர் சற்றுமுன்னர் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்னர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தன சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
தேசிய ஒருங்கிணைப்பு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சராக வாசுதேவ நாணயக்கார பதவி ஏற்றுள்ளார்.
ஊடகம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.
கலாசார, உள்நாட்டலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி (வடமேல்) பிரதி அமைச்சராக ஆர்.டி. அசோக பிரியந்த பதவி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக செயற்பட்ட தினேஸ் குணவர்தன், வாசுதேவ நாயணக்கார, கெஹலிய ரம்புக்வெல்ல போன்றவர்களுக்கு இன்று அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Two new cabinet ministers, a state minister and a deputy
minister took oaths before President Maithripala Sirisena at the Presidential
Secretariat (04) a short while ago.
Hon. Ministers
Hon. Dinesh Gunawardena: Minister of Megapolis and
Western Development
Hon. Vasudeva Nanayakkara: Minister of National
Integration, Reconciliation, and Official Languages
Hon. State Ministers
Hon. R.D. Ashoka Priyantha: Deputy Minister of Cultural
and Internal Affairs, and Regional Development (Wayamba)
Hon. Deputy Ministers
Deputy Minister of Culture and the Arts - R D Ashoka
0 comments:
Post a Comment