ஜே.வி.பியின்
ஆதரவு ரணிலுக்கு
விஜித்த
ஹேரத் எம்.பி தெரிவிப்பு
மக்கள் விடுதலை முன்னணி, தனது கட்சியின் ஆதரவை ரணில்
விக்கிரமசிங்கவுக்கு வழங்கவுள்ளதாக, அக்கட்சியின் பிரசாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்
விஜித்த ஹேரத், இன்று (02)
தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் தற்போது
நடைபெற்று வரும் கட்சித் தலைவர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்குமென, விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பலரும், இந்தக்
கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment