அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு!
12 பேர் சம்பவ இடத்திலேயே பலி
பதற்றத்தில் மக்கள்

அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 6 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசு கட்டடம் ஒன்றில் பாரபட்சம் இன்றி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.

காயமடைந்த ஆறு பேரில் ஒருவர் அந்நாட்டு பொலிஸ் அதிகாரி எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட 12 பேரின் அடையாளங்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் குடிமக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாட்டு அரசியல் சாசனம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாலானோர் துப்பாக்கிகளை வைத்துள்ளனர். இது அமெரிக்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஏனெனில் பல்வேறு காரணங்களுக்காக சக குடிமக்களை சிலர் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top