கடவுச்சீட்டுக்கான கட்டணம்
நாளை முதல் அதிகரிப்பு
கடவுச்சீட்டுக்கான
கட்டணத்தில் நாளை முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக
குடிவரவு குடியகல்வு
கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸான் ரத்ணாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக
பொதுவான கடவுச்சீட்டுக்கான
கட்டணம் 3000 ரூபாவில் இருந்து 3500 ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது.
ஒரே நாளில்
விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணம் ரூபா 10,000 இல் இருந்து
15,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
16 வயதிற்கு
உட்பட்டவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம்
ரூபா 2000 இல்
இருந்து ரூபா
2500 ஆக அதிகரிக்கப்படுகின்றது.
ஒரே நாளில்
விநியோகிப்பதற்கான கட்டணம் 5000 ரூபாவில்
இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
கடவுச்சீட்டு திருத்தங்களை மேற்கொள்வதற்கான
கட்டணம் 500 இல் இருந்து 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.