இந்திய அமைச்சரவையில் ஆறு பெண்கள்
அமேதி
தொகுதி எம்.பி., ஸ்மிரிதி
இரானி உள்ளிட்ட
ஆறு பெண்
அமைச்சர்கள், மோடியின் புதிய அரசில் இடம்
பெற்றுள்ளனர். கடந்த முறையை விட, இம்முறை
பெண் அமைச்சர்களின்
எண்ணிக்கை குறைந்து
உள்ளது.
இந்திய
லோக்சபா தேர்தலில், கடந்த முறையை
விட அதிக
பெண்கள் வெற்றி
பெற்றாலும், இம்முறை, அமைச்சரவையில், அவர்களுக்கான பிரதிநிதித்துவம்
குறைந்துள்ளது. கடந்த முறை, மோடி அரசில்
எட்டு பெண்
அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். இம்முறை, அது
ஆறு பெண்
அமைச்சர்களாக குறைந்து உள்ளது.
முதல்
முறையாக, இராணுவ
பெண் அமைச்சராக
பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், இம்முறையும் அமைச்சரவையில்
சேர்க்கப்பட்டுள்ளார். சிரோன்மணி அகாலிதளம்
கட்சியின் ஹர்சிம்ரத்
கவுர் பாதல்,
52, சாத்வி நிரஞ்சன் ஜோதி, 52, ரேணுகா சருதா,
55, தேவஸ்ரீ சவுத்ரி, 48, ஆகியோருக்கு அமைச்சர் பதவி
கிடைத்துள்ளது.
0 comments:
Post a Comment