ஜாதிக ஹெல
உறுமய அதுரலிய ரத்ன தேரரால்
மைத்ரிக்கு விடுக்கப்பட்டுள்ள 24 மணிநேர காலக்கெடு!
அரசாங்கத்தின்
கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாத்
பதியூதீன் மற்றும்
மேல் மாகாண
ஆளுநர் அசாத்
சாலி, கிழக்கு
மாகாண ஆளுநர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரது
பதவிகளை பறித்து
அவர்களை நீதியான
விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியுள்ள
அதுரலிய ரத்ன
தேரர், இதற்காக
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவுக்கு 24 மணி நேர காலக்கெடுவும் விதித்துள்ளார்.
இந்த
காலப்பகுதிக்குள் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கத் தவறினால்
தன்னால் எடுக்கக்கூடிய
அதி உச்ச
தீர்மானத்தை எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்யப் போவதாகவும்
சிங்கள பௌத்த
மக்களின் பாதுகாவலராக
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்
ஜாதிக ஹெல
உறுமய நாடாளுமன்ற
உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் எச்சரிக்கையும்
விடுத்திருக்கின்றார்.
உயிர்த்த
ஞாயிறு தாக்குதல்களை
நடத்திய தற்கொலைதாரிகளுடன்
நேரடித் தொடர்புகளை
பேணியதாக குற்றச்சாட்டுக்கு
முகம்கொடுத்துள்ள கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர்
ரிசாத் பதியூதீன்
மற்றும் மேல்
மாகாண ஆளுநர்
அசாத் சாலி,
கிழக்கு மாகாண
ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
ஆகியோரை அவர்
கள் வகிக்கும்
பதவிகளில் இருந்து
உடனடியாக நீக்குமாறு
வலியுறுத்தி நாடு முழுவதும் பரந்துவாழும் பௌத்த
சாசனத்தை பாதுகாப்பதற்கான
அமைப்பின் செயலாளர்கள்
அனைவரினதும் கையொப்பங்களுடன் மனு வொன்றை கடந்த
22 ஆம் திகதி
ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் நாடாளுமன்ற
உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த
மனு தொடர்பில்
ஜனாதிபதி சாதகமான
பதிலை தெரிவிக்காதுவிட்டால்,
ராஜகிரிய பகுதியில்
அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நாளை
30 ஆம் திகதி
பிற்பகல் மதத்
தலைவர்கள், கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள், சிவில்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் போர் வீரர்கள்
ஆகியோருடன் இடம்பெறும் கலந்துரையாடலின்
பின்னர் அடுத்தகட்ட
நடவடிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாகவும் ரத்ன
தேரர் அறிவித்துள்ளார்.
இதேவேளை
கொழும்பிலுள்ள மாநகர சபை கேட்போர் கூடத்தில்
நேற்று மாலை
இடம்பெற்ற நிகழ்வொன்றில்
கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுநர் அசாத்
சாலி, வெறுமனே
தன் மீது
பழிசுமத்துவதை விடுத்து தான் என்ன தவறு
செய்தேன் என்பதை
நிரூபிக்குமாறு அதுரலிய ரத்ன தேரருக்கு சவால்
விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment