மைத்திரியுடன் சென்ற தமிழ் அமைச்சர்
மனோ கணேசன்
என்ன கூறியிருக்கின்றார்?
அவரின் முகநூல் பதிவிலிருந்து
இந்திய
பிரதமர் நரேந்திர
மோடி நேற்று
இரண்டாவது முறையாகவும்
இந்திய பிரதமராக
பதவியேற்றார். இதற்கு உலக நாடுகள் பலவற்றிலும்
இருந்து பலர்
கலந்து கொண்டனர்.
இலங்கையில்
இருந்து ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார். இவருடன் அமைச்சர்
மனோ கணேசன்
அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி ஆகியோரும் சென்றுள்ளார்கள்.
இது
தொடர்பில் மனோ
கணேசன் தனது
டுவிட்டர் பக்கத்தில்
கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
“நட்பான
இந்திய நாட்டின்,
டெல்லி சூட்டில்
(45c) பிரதமர் மோடியின் பதவியேற்பில் கலந்துக்கொள்ள ஜனாதிபதியுடன்
வந்திறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு
மேலதிகமாக புது டெல்லியிலிருந்து>
"நீங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, முழு
தென்னாசியாவுக்கும் செளகிதாராக அதாவது
காவல்காரராக இருக்க வேண்டும்" என்று பிரதமர்
நரேந்திர மோடியிடம்
நான் கூறினேன்.
என் கருத்தை
அவர் ஆமோதித்து
ஏற்றுக்கொண்டார்.
"நான் இந்தியாவின் செளகிதார்-காவல்காரன்"
என்பதே பிரதமர்
மோடி தலைமையிலான
பிஜேபியின் பிரதான தேர்தல் சுலோகமாக இருந்தது.
அதை மனதில்
வைத்துக்கொண்டே நான் இதை ஊடகங்களிலும், அவரிடம்
நேரடியாகவும் சொன்னேன்.
எனது
கருத்து ஏற்கனவே
அவரிடம் அவரது
உதவியாளர்கள் மூலம் கூறப்பட்டிருந்ததாக நினைக்கிறேன். நேற்றிரவு
என்னை கண்டதும்
அவரே இதை
ஞாபகப்படுத்தி கைலாகு கொடுத்து பேசினார்.
இந்தியா
ஒரு பலமான
நாடாக இருப்பது
இலங்கைக்கும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் அவசிய
தேவை என
நான் நம்புகிறேன்
என்பதை டெல்லி
ஊடகங்களிடம் பேசும் போது சொன்னேன்.
கடந்த
காலங்களை விட
இப்போது மாறிவரும்
இலங்கை உட்பட்ட
தென்னாசிய அரசியல்
தீவிரவாத சூழலில்
இது முக்கியத்துவம்
பெறுகிறது என,
தமிழ் முற்போக்கு
கூட்டணி தலைவர்
என்ற முறையில்
நான் திடமாக
நம்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment