வழமைக்கு திரும்பாத நீர்கொழும்பு மக்கள்!
மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படும்
முஸ்லிம் சமூகம்!!
நீர்கொழும்பு
- கட்டுவபிட்டிய தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று
மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து
நீர்கொழும்பு நகர் வழமைக்கு திரும்பாத நிலை
தொடர்ந்து நீடிக்கின்றது என அறிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு
நகரில் உள்ள
முஸ்லிம் மக்களின்
உணவகங்கள் மற்றும்
வர்த்தக நிலையங்களுக்கு
செல்லும் வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உணவக
உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
நீர்கொழும்பு
- சிலாபம் பிரதான
வீதியில் பெரியமுல்லை
பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான முஸ்லிம் உணவகங்கள்
வழமையாக 24 மணித்தியாலங்களும் திறக்கப்பட்டிருக்கும்.
எனினும்
தற்போது இந்த
உணவகங்களில் முன்னரைப் போன்று வியாபாரம் நடைபெறுவதில்லை
என உணவக உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பல
உணவகங்கள் வாடிக்கையாளர்களின்றி
வெறிச்சோடி இருப்பதையும் சில உணவகங்கள் முழுமையாக
மூடப்பட்டு இருப்பதையும் அவதானிக்க முடிவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதன்காரணமாக
வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு
சொந்தமான கடைகள்
பலவற்றில் பெரும்பான்மையினரும்
தொழில் புரிந்து
வருகின்றனர்.
இந்த
சம்பவங்களை அடுத்து முஸ்லிம்கள் நடத்தும் வர்த்தக
நிலையங்களுக்கு பெரும்பான்மை சமூகத்தினர் செல்லுவதில்லை எனவும்
முஸ்லிம் கடைகள்
என்பதை அறிந்தவுடன்
பலர் பொருட்களை
கொள்வனவு செய்யாமல்
திரும்பிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால்
முஸ்லிம் வர்த்தகர்கள்
மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகின்றது.
தமது
பிரச்சினைகள் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக
கருத்து தெரிவிப்பதற்கு
தாம் விரும்பவில்லை
என பல
வர்த்தகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
முச்சக்கர
வண்டி சாரதிகள்
உட்பட நகரில்
சிறு வர்த்தகத்தில்
ஈடுபட்டுவந்த வியாபாரிகள் வரை இந்த நிலைமையினால்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு
சிலர் செய்த மிலேச்சத்தனமான செயலின்
காரணமாக பொதுவாக
நாடு தழுவிய
ரீதியில் முஸ்லிம்கள்
பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு முஸ்லிம்கள்
விசனம் வெளியிட்டுள்ளனர்.
உங்களது
வீடுகளையும் கடைகளையும் வாடகைக்கு வழங்குவதாயின் எம்மவர்களுக்கே
முன்னுரிமை வழங்குங்கள் என்று நீர்கொழும்பு கட்டுவபிட்டிய
பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதனைால்
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகளையும் கடைகளையும் வழங்கியுள்ள
பலர் அதனை
மீளவும் பெற்று
வருகின்றனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment