குருநாகல் டாக்டர் விசாரனைக்காக
சுகாதார அமைச்சு குழு நியமனம்
குருநாகல்
வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர்
தொடர்பில் விசாரனைகளை
மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தனியான புத்திஜீவிகள்
குழுவொன்றை நியமித்திருப்பதாக சுகாதார அமைச்சர் டாக்டர்
ராஜித சேனாரத்ன
தெரிவித்துள்ளார்.
அலரி
மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியராளர் மகாநாட்டில்
இது தொடர்பாக
அவர் மேலும்
தெரிவிக்கையில் இந்த குழுவில் நரம்பியல் விஷேட
வைத்தியர்கள் வைத்திய சபையின் பிரதி நிதிகளும்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர்
கைது செய்யப்பட்டமை
தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள
விசாரனை தொடர்பில்
சுகாதார அமைச்சு
எந்த வித
அழுத்தத்தையும் மேற்கொள்ளாது என்றும் விசாரனை நடவடிக்கைகள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதாகவும்
அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளார்.
குருநாகல்
வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது டாக்டர் சேகு
ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற டாக்டரே
இவ்வாறே கைது
செய்யப்பட்டுள்ளார். இவர் பணம்
சம்பாதித்தமை தொடர்பான விடயங்களை கண்டறிவதற்காகவே டாக்டருக்கு
எதிரான விசாரனைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேகு
ஷியாப்தீன் மொஹமட் ஷாஃபி என்ற 42 வயதுடைய
டாகடர் குருநாகல் பொலிஸாரால் கடந்த
24ம் திகதி
இரவு கைது
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment