கொங்கோவில் படகு மூழ்கி 45 பேர் உயிரிழப்பு:
பலரையும் காணவில்லை
கொங்கோவில்
ஏரி ஒன்றை
கடக்க முற்பட்டபோது
படகு விபத்துக்குள்ளானதில்
45 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பயணம்
செய்த அதிகமானோர்
காணாமல் போயுள்ளதாக
உள்ளூர் மேயர்
தெரிவித்துள்ளார்.
கடந்த
சனிக்கிழமை இரவு நடந்த இந்தச் சம்பவத்தில்
183 பேர் மாத்திரமே
இருக்க அனுமதிக்கப்பட்ட
படகில் 350 பேர் பயணித்துள்ளனர்.
இதுவரை
30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில்
12 பெண்கள், 11 குழந்தைகள் மற்றும் 7 ஆண்கள் இருப்பதாக
அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
“இந்த
எண்ணிக்கை தற்காலிகமானதுதான்.
இது மேலும்
அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான
எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது.
எனினும் மீட்கும்
முயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது” என்று
நகர மேயர்
சைமன் எம்பியோ
குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
மாதம் இடம்பெற்ற
இரு படகு
விபத்துகளில் 167 பேர் உயிரிழந்தனர்.
ஆபிரிக்காவின்
மிகப்பெரிய நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசு
உள்நாட்டு சண்டைகளால்
மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. மேலும்
மத்திய அரசு
அமைந்துள்ள கின்ஷாசா நகரிலிருந்து மிகத் தொலைவில்
உள்ள பகுதிகளில்
அரசின் கட்டுப்பாடு
பலவீனமாக உள்ளது.
இதனால் இங்குள்ள
மக்கள் நாட்டிலிருந்து
வெளியேறிச் செல்ல முயன்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment