குருணாகல மருத்துவ நிபுணர் மீது
இதுவரை 51 பெண்கள் முறைப்பாடு
தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை
என்று இவர்கள் கூறியுள்ளனராம்.


குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த மருத்துவரால் மகப்பேற்றின் போது, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனராம்.

தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும், அளவுக்கதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார் என்ற சந்தேகத்திலும், குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீன் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் தற்போது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இவர், 8000இற்கும் அதிகமான சிங்களப் பெண்களுக்கு கருத்தடை செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.

இந்தநிலையில், மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக நேற்று வரை 51 பெண்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

குறித்த மருத்துவரால் மகப்பேற்றின் போது, சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பின்னர், தமக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவில்லை என்று இவர்கள் கூறியுள்ளனராம்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top