குண்டு தாக்குதலை மையப்படுத்தி
தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின்,
அது பயங்கரவாதத் தாக்குதலைவிட
படுமோசமான செயலாகவே அமையும்
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்


குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ( 31) மாலை இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார்.


இதன்போது, “21/4 தாக்குதலை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகின்றது.

எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவாக இருக்கின்றது.’’ என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தையும்  தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்தார்.


இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

“1988 ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது. பலவழிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாடே பதற்றமடைந்திருந்தது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகவே அமையும்.

நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு வரும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது டிசம்பர் 9 ஆம் திகதியை தாண்டிதாக இருக்ககூடாது.

ஆகவே, உடன் நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், காலக்கெடுவரை காத்திருந்து நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம்.’’ என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top