சைக்கிளில் வந்து பதவியேற்ற
2 இந்திய மத்திய அமைச்சர்கள்
இந்தியாவிலுள்ள
ராஷ்டிரபதி பவனில் நேற்று (மே
30) நடைபெற்ற பதவிப்பிரமாணத்தில் பங்கேற்க,
அமைச்சர்களாக பதவியேற்க இருந்த பா.ஜ., எம்.பிக்கள்
இருவர் சைக்கிளில்
வந்தனர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்திய
லோக்சபா தேர்தலில், 303 தொகுதிகளை பெற்று
தனிப்பெரும்பான்மை பெற்றது பா.ஜ., அதன்
தேசிய ஜனநாயக
கூட்டணி மொத்தம்
354 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இதனால் மீண்டும்
2வது முறையாக
நேற்று பதவியேற்ற
மோடி, இன்று
மே 31, ல்
தனது அமைச்சரவை
யில் பங்கேற்றோருக்கு
இலாக்காக்களை ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்.
அதில்,
25 பேர் கேபினட்
அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்பு கொண்ட இணை
அமைச்சர்கள் மற்றும் 24 பேர் இணை அமைச்சர்களாக
நேற்று (மே
30 ) பதவி ஏற்றனர்.
இந்த விழாவிற்கு
2 பேர் சைக்கிளிலேயே
வந்து பதவி
ஏற்றது பார்வையாளர்களை
கவர்ந்தது.
அவர்களில்
ஒருவர், பா.ஜ.,வின்
மன்சுக்லால் மாண்டவியா மற்றும் அர்ஜுன் ராம்
மேக்வால். இவர்,
குஜராத்தை சேர்ந்தவர்.
சென்ற முறை
விவசாயத்துறை இணையமைச்சரான இவருக்கு தற்போது, பாராளுமன்ற
விவகாரம் மற்றும்
கனரக தொழில்துறை
இணை அமைச்சர்
பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மற்றொருவர்
மன்சுக்லால் மாண்டவியா, சென்ற முறை பதவி
வகித்த அதே
ரசாயனம், உரத்துறை
மற்றும் கப்பல்
போக்குவரத்து துறை தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சராகவும்
பொறுப்பேற்றார்.
0 comments:
Post a Comment