அத்துரலிய ரத்ன தேரருக்கு
ஆதரவு தெரிவித்து வியாழேந்திரனும்
மட்டக்களப்பில் போராட்டம்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு துரோகமிழைத்தவர்
தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறாராம்
பாராளுமன்ற
உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்துள்ள
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில்
பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் அடையாள
உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
மட்டக்களப்பு,
காந்தி பூங்காவிற்கு முன்பாக இன்று காலை
7 மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
அமைச்சர்
ரிசாட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர்
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர்
அசாத் சாலி ஆகியோர் பதவியிலிருந்து
விலக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்
என இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மங்களாராம
விகாராதிபதி அம்பிட்டிய சுமங்கள தேரரும் உண்ணாவிரதத்தில் இணைந்து கொண்டார்.
நாடாளுமன்ற
உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கண்டி
தலதா மாளிகைக்கு முன்பாக சாகும் வரையிலான
உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகளித்த
மக்களுக்கும், தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கும் பதவி ஆசை நிமிர்த்தம்
துரோகமிழைத்த
வியாழேந்திரன் ஏதோ ஒரு தனிப்பட்ட அஜந்தாவை வைத்துக்கொண்டு தற்போது தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு
வேட்டு வைக்கிறாரார் என இவரின் அண்மைக்கால செயல்பாடுகளை அவதானிக்கும் நடுநிலை மக்கள்
கவலை வெளியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment