கீறி காயப்படுத்திய பெண் சட்டத்தரணி
பிணையில் வெளியில் வந்தார்



புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கீறி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி பிணையில் வெளியில் வந்துள்ளார்.
                  
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவுக்கமைய ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் சேவையாற்றும் 52 வயதுடைய சட்டத்தரணியே இவ்வாறு கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணி புதுக்கடை உயர் நீதிமன்ற வளாகத்தின் பிரதான நுழைவாயிலில் நீதிமன்ற வளாகத்தினுள் நுழையும் போது அவரை, பெண் கான்ஸ்டபிள் பரிசோதிக்க முயன்றுள்ளார்.

அதன்போது, பெண் சட்டத்தரணி குறித்த கான்சடபிளை கீறி காயப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top