சர்ச்சைக்குரிய வைத்தியர்
சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பில்
அதிகம் அலட்டிக் கொள்ளும் முக்கிய பொறுப்பில் உள்ளவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆதரவாளர்
அசாத் சாலி வெளியிட்டுள்ள கருத்து!



சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் ஷாபி தொடர்பிலான முழுமையான விபரங்கள் விரைவில் வெளியாகும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றிய குறித்த வைத்தியர் பணியாற்றிய நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான முறையில் சொத்துக்கள் சேர்த்தமை, சட்டவிரோதமாக பெண்களுக்கு சிசேறியன் சத்திர சிக்சை மேற்கொண்டமை மற்றும் பிறந்த குழந்தைகளை வேறு பெண்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தற்போது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறன றிலையிலேயே, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தொடர்ந்தும் பேசுகையில்,

இந்த வைத்தியசாலையில் குறித்த வைத்தியர் தொடர்பில் அதிகம் அலட்டிக் கொள்ளும் முக்கிய பொறுப்பில் உள்ளவர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் ஆதரவாளர் ஆவார்.

அதேபோன்று இந்த வைத்தியர் தொடர்பில் முந்தியடித்துக் கொண்டு விசாரணை மேற்கொள்ளும் பொலிஸ் உயர் அதிகாரியின் மனைவி இந்த வைத்தியசாலையில் வைத்தியர் ஆவார்.

இது தான் அந்த வைத்தியர் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் பின்னணி.

ஒருவருக்கு ஒரு சத்திரசிகிச்சை செய்யும் போது அந்த நோயாளியிடம் குறைந்தது நான்கு வைத்தியர்கள் இருத்தல் வேண்டும் என ஜனாதிபதியும் அண்மையில் கூறியிருந்தார்.

அவ்வாறு இருக்கையில் இதனை இரகசியமாக இந்த வைத்தியர் எவ்வாறு செய்வார். இது குறித்த உண்மைகள் மிக விரைவில் வெளிவரும்என ஆளுர் ஆசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top