முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள் ,
ஏனைய சமூக சேவையாளர்களுக்கு
பணிவான வேண்டுகோள்


கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின் எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் மீது பல கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது இந்த சூழ்நிலையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களும் அரச அதிகாரிகளும் சில தெளிவில்லாத காரணத்தினால் எமது முஸ்லிம் சமூகத்தினை தவறாக சிந்தித்து சில தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர்.

இதற்குப் பிரதான காரணம் எமது மார்க்கத்தைப் பற்றிய சரியான புரிதல் தெளிவுகள் பெரும்பான்மை சமூகத்துக்கு தெளிவுபடுத்த படாததே ஆகும்

* விமானத்தில் குர்ஆன் ஓதிய நபர் கைது செய்யப்பட்டார்

* துவா மன்ஸில்கள் குர்ஆன் பிரதிகள் இன்னும் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் புத்தகங்கள் வைத்திருந்த சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்

* அரபு மொழியை நாடு ரீதியாக தடை செய்ய வேண்டும்

* அரபு மதரஸாக்களை மூட வேண்டும்

இவ்வாறான செயற்பாடுகள் கோஷங்கள் இன்று பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களாலும் அரசியல் பிரதிநிதிகளாலும் செயல்படுத்தப் படுகிறது இதற்கு பிரதான காரணம் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் புத்திஜீவிகள் சமூக சேவையாளர்கள்தான் காரணமாக இருக்கின்றனர் .

ஏனென்றால் எமது மார்க்கத்தைப் பற்றிய அரபு மொழியைப் பற்றிய தெளிவான சரியான விளக்கங்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு அரசியல் பிரதிநிதிகளுக்கு சரியாக சிங்கள மொழியில் இதுவரையும் தெளிவுபடுத்தப்படாமை ஆகும்.

இதன் காரணமாகத்தான் பெருமான் இனத்தைச் சேர்ந்த மக்களும் அரசியல் பிரதிநிதிகளும் இன்று எமது சமூகத்தையும் மார்க்கத்தையும் பிழையாக விமர்சிப்பதற்கான பிரதான காரணமாகும் ஆகவே

அவசியம் செய்ய வேண்டியவை
__________________________________

பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகளையும் புத்திஜீவிகளையும் சந்தித்து அரபு மொழியானது எங்களது மூல மார்க்க மொழியாகும் அரபு மொழியில் தான் எங்களது மார்க்க புத்தகமான குர்ஆன் காணப்படுகிறது என்றும் தெளிவு படுத்தல்
(உதாரணமாக பௌத்தர்களின் மார்க்க புத்தகம் ஆரம்பத்தில் பாலிமொழியில் காணப்பட்டது)

அரபு மொழியானது பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட மொழி அல்ல முஸ்லிம் சமூகத்தின் மார்க்க ரீதியான மொழி ஆகும் என்று தெளிவுபடுத்தல்

அன்று LTTE பயங்கரவாதிகள் தமிழ் மொழியை பேசினார்கள் அதற்காக தமிழ் மொழியை தடை செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை அதேபோன்று முஸ்லிம்களின் குர்ஆன் எழுதப்பட்டுள்ள மொழி அரபு மொழி ஆகும் ஆகவே இதைத் தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெளிவு படுத்தல்

அரபு மொழி அல்லது மார்க்க புத்தகங்கள் ஒருநாளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை அவை மார்க்க ரீதியான கடமைகளை கூறுகின்ற வசனங்கள் என்று தெளிவு படுத்தல்

விஷேடமாக பாதுகாப்பு படையினருக்கும், அரச அதிகாரிகளுக்கும் அரபு மொழி பற்றிய குர்ஆன் பற்றிய முஸ்லிம் சமூகம் எதற்காக அரபு மொழியை பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவை ஏற்படுத்தல்

பாதுகாப்பு அமைச்சின் ஊடாக அரபு மொழியை முஸ்லிம்கள் மார்க்க கடமைகளுக்காக பயன்படுத்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை என்று விஷேட சுற்றறிக்கை ஒன்றை பாதுகாப்புப் படைவீரர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வெளியிட வேண்டும் இதனை எமது அரசியல் தலைவர்கள் அவசியம் கட்டாயம் செய்ய வேண்டும் இதன் மூலம் பல அப்பாவிகள் கைது செய்யப்படும் சம்பவங்களை தவிர்த்துக் கொள்வதற்கு வழியாகும்

ஆகவே உங்களிடம் இறுதியாக கேட்டுக் கொள்கின்ற விடயம் என்னவென்றால் இவ்வாறான விடயங்களை தற்போதைய சூழ்நிலையில் அவசியமாக அவசரமாக செயல்படுத்த வேண்டியது கட்டாயக் கடமையாக எமது சமூகத்தில் காணப்படுகிறது

இதை செயல்படுத்தாமல் ஊடக அறிக்கைகளை விடுவதாலும் மேடை பேச்சுக்களை பேசுவதாலும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட போதும் இல்லை எமது சமூகத்திற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட போவதுமில்லை அப்பாவி இளைஞர்களின் கைதுகள் நிறுத்தப் பட போவதில்லை என்பதை நாம் அனைவரும் உணர்ந்து சிங்கள மொழியில் பெருமானை சமூகத்துக்கு இவை அனைத்தையும் தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் என்று உங்களிடம் முஸ்லிம் சமூகத்தின் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றோம்.

-    மருதூர் ஸக்கீ செய்ன்

(உரிய நபர்களுக்கு இந்த செய்தி சென்றடைவதற்காக அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள் please share this message everybody)



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top