அபுதாபி கட்டடத்தில்
மோடியின் புகைப்படமும்
இந்திய தேசியக் கொடியும்
பிரதமர்
மோடி பதவியேற்றதை
கொண்டாடும் வகையில், அபுதாபியில் உள்ள பிரபல
நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் பிரதமர் மோடியின்
புகைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
ஜனாதிபதி
மாளிகையில், நேற்று நடந்த கோலாகலமான விழாவில்,
நரேந்திர தாமோதர
தாஸ் மோடி,
68, பிரதமராக பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி, ராம்நாத்
கோவிந்த் பதவிப்
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து
வைத்தார். இந்நிகழ்வை
உலகம் முழுவதும்
உள்ள இந்தியர்கள்
கொண்டாடினர். தலைப்பு செய்தியாகவும் இருந்தது.
இந்நிலையில்,
பிரதமர் மோடியை
கெளரவிக்கும் வகையில், அபுதாபியில் உள்ள
பிரபல வணிக
நிறுவனமான அன்நாக்
நிறுவன கட்டடத்தில்
பிரதமர் மோடியின்
புகைப்படம் ஒளிபரப்பப்பட்டது. முதலில் இந்திய தேசிய
கொடியும், தொடர்ந்து,
பிரதமர் மோடி,
இளவரசர் ஷேக்
முகமது பின்
ஜாயத் கைகுலுக்குவது
போன்ற புகைப்படமும்,
பின்னர் ஐக்கிய
அரபு எமீரேட்ஸ்(UAE)
தேசிய கொடியும்
ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த
வீடியோவை தனது
டுவிட்டர் பக்கத்தில்
வெளியிட்டு இந்திய தூதர் நவ்தீப் சூரி
கூறியதாவது: இதுதான் உண்மையான நட்பு. இரண்டாவது
முறையாக மோடி
பதவியேற்கும் போது, அபுதாபியில், இந்தியா, யுஏஇ
தேசிய கொடி,
பிரதமர் மோடி
மற்றும் ஷேக்
முகமது பின்
ஜாயத் புகைப்படம்
ஒளிபரப்பு செய்யப்பட்டது
எனக்கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment