மினுவாங்கொட உட்பட ஏனைய பகுதிகளில்
இடம்பெற்ற
வன்முறைச் சம்பவங்கள்
பதில் பொலிஸ் மா அதிபர் மீது
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
சரமாரியான குற்றச்சாட்டு!
வடமேல் மாகாணத்தில் சிலாபம், குருநாகல் மற்றும் மினுவாங்கொட பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை
அடுத்து அங்கு
இயல்பு நிலையை
தோற்றுவிக்க பதில் பொலிஸ் மா அதிபர்
தவறிவிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
தெரிவித்துள்ளது.
இது
தொடர்பாக பதில்
பொலிஸ்மா அதிபருக்கு
இலங்கை மனித
உரிமைகள் ஆணைக்குழு
தலைவர் கலாநிதி
தீபிகா உடுகம
அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குருநாகல்
பிரதேசத்துக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள்
விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் குடியிருப்பாளர்கள்,
சமூகத் தலைவர்கள்,
பொலிஸ் மற்றும்
இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
குருநாகல்
பகுதியில் இடம்பெற்ற
சம்பவங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்.
சம்பவம்
நடைபெற்றவேளை பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கு அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம்
தெரிவித்தபோதிலும் அவர்கள் உடனடி
நடவடிக்கை எதனையும்
எடுக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு பதில்
பொலிஸ் மா
அதிபருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில்
குற்றம் சாட்டியுள்ளது.
0 comments:
Post a Comment