ஓய்வு பெற்ற
ஐ.எப்.எஸ்., அதிகாரியும் தமிழருமான
ஜெய்சங்கர் மத்திய அமைச்சரானது எப்படி?
ஓய்வு
பெற்ற ஐ.எப்.எஸ்.,
அதிகாரியும் தமிழருமான ஜெய்சங்கர், மத்திய வெளியுறவு
அமைச்சரானதன் பின்னணியில் சில தகவல்கள் இருக்கின்றன.
திருச்சியை
சேர்ந்த கே.சுப்பிரமணி 1951 பேட்சை
சேர்ந்த ஒரு
ஐ.ஏ.எஸ்., அதிகாரி.
தமிழகத்திலும் டில்லியிலும் பணியாற்றினார்.
இவரது மகன்
ஜெய்சங்கர் ஒரு ஐ.எப்.எஸ்.,
அதிகாரி. 2012ம் ஆண்டு குஜராத்தில் மோடி
முதல்வராக இருந்தபோது
சீனாவுக்கு சென்றார். அப்போது அங்கு இந்திய
துாதராக இருந்த
ஜெய்சங்கரின் அறிமுகம் மோடிக்கு கிடைத்தது.காங்.,
அமைச்சரவையில் இருந்த மற்ற அமைச்சர்களைப் போல
அல்லாது, ஒரு
முதல்வராக இருந்த
மோடிக்கு உரிய
மரியாதை கொடுத்தார்
ஜெய்சங்கர். இது மோடியை மிகவும் கவர்ந்தது.
இந்தியில் சரளமாக
பேசக் கூடிய
ஜெய்சங்கர், வெளியுறவு பற்றிய பல்வேறு விஷயங்களை
மோடிக்கு எளிமையாக
விளக்கினார்.
மோடி
பிரதமர் ஆன
பிறகு 2015, ஜனவரியில் அப்போதைய வெளியுறவு செயலாளர்
சுஜாதா சிங்கை
பதவி நீக்கம்
செய்தார். சுஜாதா
சிங்கின் தந்தை
ராஜேஸ்வர், சோனியாவுக்கு நெருக்கமானவர்.2013ல் வெளியுறவு
செயலாளராக ஜெய்சங்கரை நியமிக்க
அப்போதைய பிரதமர்
மன்மோகன்சிங் விரும்பினார். ஆனால், சோனியா தலையிட்டு,
சுஜாதா சிங்கை
வெளியுறவு செயலாளராக்கினார்.
மோடி
பிரதமர் ஆனபோது,
ஜெய்சங்கர் அமெரிக்காவின் இந்திய துாதராக இருந்தார்.
அப்போது, குஜராத்
கலவரத்தின் காரணமாக அமெரிக்காவுக்கு வர மோடிக்கு
அந்நாடு தடை
விதித்திருந்தது. மோடி பிரதமர் ஆனதும், இந்த
பிரச்னையை சுமூகமாக
தீர்த்த ஜெய்சங்கர்,
மோடிக்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி
ஒபமாவுக்கும் இடையே நட்பை ஏற்படுத்தினார். இந்தியாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கத்தை
ஏற்படுத்திய ஜெய்சங்கர், அதே சமயம் ரஷ்யா,
சீனாவுடனும் உறவு சீரடையாமல் பார்த்துக்கொண்டார்.
உலக
அளவில் இந்தியா
சக்திமிக்க நாடாக இந்தியா வர வேண்டும்
என்ற மோடியின்
கனவை புரிந்துகொண்டு
அதற்கு ஏற்ப
செயல்பட்டார் ஜெய்சங்கர். இதனாலேயே வெளியுறவு செயலாளராக
ஓய்வு பெற்ற
ஜெய்சங்கரை இரண்டு முறை பணி நீடிப்பு
செய்தார் மோடி.தனது பெரும்பாலான
வெளிநாட்டு பயணங்களில் ஜெய்சங்கர் உடன் இருக்க
வேண்டும் என்று
மோடி விரும்பினார்.
ஓய்வு பெற்ற
உடன் டாடா
நிறுவனத்தில் உலக வர்த்தக விவகார தலைவராக
பணியாற்ற ஜெய்சங்கரை
மோடி அனுமதித்தார்.
ஏனெனில் ஐ.ஏ.எஸ்.,
ஐ.எப்.எஸ்., அதிகாரிகள்
ஓய்வு பெற்ற
பின், தனியார்
வேலைக்கு செல்ல
வேண்டும் எனில்
2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த விதிமுறை
ஜெய்சங்கருக்காக தளர்த்தப்பட்டது.
0 comments:
Post a Comment