கைத்தொலைபேசியை சார்ஜ்
செய்தபோது
ஏற்பட்ட மின் ஒழுக்கால் ஏற்பட்ட
விபரீதம்!
தீயில் எரிந்து நாசமாகிய
மக்களின் குடியிருப்பு
தொகுதி
தலவாக்கலை
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒலிரூட் கிழக்கு பிரிவில் இடம்பெற்ற தீ விபத்தில் லயன்
குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.
குறித்த
சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது 21 குடும்பங்களை சேர்ந்த 71 பேர்
பாதிக்கப்பட்ட நிலையில் ஒலிரூட் பாடசாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த
லயனில் குடியிருப்பாளர் ஒருவரின் குடியிருப்பில் கைத்தொலைபேசியை சார்ஜ் செய்தபோது
அதிலிருந்து ஏற்பட்ட மின் ஒழுக்கே தீவிபத்துக்கான காரணமென கண்டறியப்பட்டுள்ளது.
நுவரெலியா
மாநகரசபை மற்றும் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தீயனைப்பு பிரிவினரும், பொலிஸாரும், பொது மக்களும்
இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள்ள கொண்டு வந்துள்ளனர்.
குறித்த
தீ விபத்தினால் லயன் குடியிருப்பு தொகுதி இடிந்து விழும் நிலையிலிருப்பதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும்
இந்த விபத்தில் உயிராப்பத்துக்கள் அல்லது காயங்கள் எவருக்கும் ஏற்டவில்லை எனவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்
தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தலவாக்கலை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment