28.05.2019 அன்று நடைபெற்ற
அமைச்சரவைக் கூட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



01. கழிவுகளாக அகற்றப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்காக பைரோலைசிஸ் இயந்திரமொன்றை ( waste plastic Pyrolysis Machine ) நிறுவுதல் (நிகழ்ச்சி நிரலில் 13ஆவது விடயம்)

நகர பிரதேசங்களில் திண்மக் கழிவாக கருதப்படும் மற்றும் அவசரமாக அகற்றப்படும் பொலித்தீன் பொருட்களை மீள்சுழற்சி செய்யாமல் அவசரமாக வெளிசுற்றாடல் பகுதியில் கொட்டுவது பாரிய சுற்றாடல் மற்றும் சுகாதாரப் பிரச்சினையாக அமைந்துள்ளது. நகரில் கழிவு பொருட்களுடன் சேகரிக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோலைசிஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீள்சுழற்சி செய்வதற்காக கொரியாவின் ஒமெகா எனர்ஜி என்வயர்மன்டெக் நிறுவனத்தினால் இயந்திரமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் மூலம் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை பைரோ லைசியஸ் எரிபொருள் மற்றும் காபன் தூள்களாக மாற்றப்படுவதுடன் இதனை எரிபொருளாகவும் காபன் தூளை வீதிகளுக்கு போடப்படும் கற்களாக பயன்படுத்தக் கூடிய தன்மை உண்டு. ஒமெகா எனர்ஜி என்வயர்ரோடக் நிறுவனத்தினால் இந்த இயந்திரத்தை மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் கையளிப்பதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதனை கம்பஹா மாவட்ட ஒன்றிணைக்கப்பட்ட திண்ம கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் அத்தனகல பெத்தியாகந்த சேதனப் பசளை பிரிவில் நிறுவுவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் என்ற ரீதியில் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. சுரக்ஷிதலத் கணக்கு திருத்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 15ஆவது விடயம்)

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் தமது அசையும் சொத்துக்கள் உள்ளிட்டவற்றில் ஒருபகுதியை பயன்படுத்தி கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதற்கும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளை செய்யும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் என்ற கொடுக்கல் வாங்கல் சட்டத்தை இரத்து செய்து சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கலில் சட்ட கட்டமைப்பை மறுசீரமைப்பதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2009ஆம் ஆண்டு இல 49 கீழான சுரக்ஷிதலத் கணக்கு சட்டத்தை இரத்து செய்து புதிய திருத்த சட்டத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டமூலத்தின் காரணமாக தற்பொழுது நடைமுறையில் உள்ள நிபந்தனை கட்டளைச் சட்டம் அறக்கட்டளை பற்றுச்சீட்டு கையளிகக்கப்பட்ட கட்டளைச்சட்டம் வட்டிச் சட்டம் 2000 ஆம் ஆண்டு இல 56 கீழான குத்தகைச் சட்டம் 1990 இல 14 கீழான அறக்கட்டளை பற்றுச்சீட்டு சட்டம் 2007ஆம் ஆண்டு இல 7 கீழான கம்பனி சட்டம் மற்றும் ஆவணங்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டம் ஆகியனவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அடையாளங் காணப்பட்ட பின்னர் அதற்காக அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக திருத்தம் மேற்கொள்ளப்பட்ட சுரக்ஷிதலத் கொடுக்கல் வாங்கல்கள் திருத்த சட்டமூலத்துடன் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என அடையாளங் காணப்பட்டுள்ள மேலே குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் கட்டளைச் சட்டத்தின் 7ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. ஹக்கல தாவரவியல் பூங்காவை அபிவிருத்தி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 19ஆவது விடயம்)

1961ஆம் ஆண்டில் பிரிட்டனினால் ஆரம்பிக்கப்பட்ட ஹக்கல தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்கு வருடாந்தம் உள்ளுர் மற்றும் வெளிநாட்டவர் சுமார் 9 இலட்சம் பேர் வருகை தருகின்றனர். மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச தரத்திற்கு அமைவாக இதனைக் கையாள்வதற்காக தாவரவியல் பூங்காவின் அபிவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் ஆகக் கூடுதலான பார்வையாளர்களை கவரக் கூடிய நிலைமை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக 2023ஆம் ஆண்டளவில் இந்த பூஙகாவின் வருமானத்தை 25 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கும் புதிய தொழில்வாய்ப்பை உருவாக்குவதற்குமான மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த மூலிகைப் பூங்கா இயற்கை காட்சிப் பொருட்கள் கரையான்களினால் அழிக்கப்படுதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான மற்றும் தொழில் நுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தல் பூங்காவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகளை மேம்படுத்தல் கல்வி செயற்பாடுகளை விரிவுபடுத்துதல் பட்டியலிடுதல் மற்றும் திணை நிலத்துக்குரிய உயிரினத் தொகுதிக்கான கன்றுகளுக்கான தேசிய வங்கியொன்றை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பூங்காவை மேம்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தை 2019-2023 காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவாhசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 21ஆவது விடயம்)

சுற்றுலா பயணிகள் மத்தியில் வளர்ச்சியைக் கண்டு வரும் பயணிக்க கூடிய இடமாக இலங்கை மேம்பட்டுள்ளதுடன் இந்த நிலை தொடர்ந்து வளர்ச்சியை அடையும் நோக்கில் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போர் மற்றும் அவர்களுடன் இணைந்ததாக இலங்கையை மேம்படுத்துவதற்கான கூட்டு மேம்பாட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அலுவலகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக வருடமொன்றில் 250 இற்கும் மேற்பட்ட பயணிகளை நாட்டிற்குள் அழைத்து வரும் வெளிநாட்டு சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடன் 150 மில்லியன் ரூபா முதலீட்டில் உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, இத்தாலி ,ஜேர்மன், சீனா, யுக்ரேன, ஜப்பான,; பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பென்லக்ஸ், கொரியா, கல்ப் மற்றும் ஸ்கன்டினேவியா நாடுகளின் சுற்றுலா நடவடிக்கைகளை முன்னெடுப்போருடனான மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைகளை பெற்றுக் கொள்வதற்கு சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

05. உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் சுற்றுலா துறை எதிர்கொண்டுள்ள ஆகக்கூடிய அழுத்தத்தை குறைப்பதற்கான மேம்பாட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 22ஆவது விடயம்)

தொழில் வாய்ப்;புக்களை அதிகரிக்கும் நோக்கில் இலங்கை சுற்றுலா மூலோபாய திட்டம் 2017 – 2020 வரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதே வேளையில் சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் காரணமாக இந்த இலக்கை நிறைவேற்றுவதில் சவால்கள் நிலவுகின்றன. இதனால் இதற்குத் தீர்வாக ஒன்றிணைந்த பொதுமக்கள் தொடர்பு மற்றும் குறுகிய கால விற்பனை மற்றும் வர்த்தககுறி தொடர்பாடல் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவம் அடையாளங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த துறையின் அனுபவமிக்க உலகளாவிய பிரதிநிதிகள் மூலம் 45 நாள் காலப்பகுதிக்கு குறுகிய கால பொதுமக்கள் இணைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கையில் சுற்றுலா சின்னத்தை மீண்டும் பிரபல்யப்படுத்துவதற்காக 6 மாத காலப்பகுதி முழுவதும் விளம்பர பிரச்சார வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றுலா அபிவிருத்தி வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06.அநுராதபுரம் ஜயசிறி மஹாபோதி; மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 23ஆவது விடயம்)

உள்நாட்டு வெளிநாட்டு பௌத்த மக்களின் கௌரவத்திற்கு உட்பட்ட ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய உள்ளிட்ட வணக்கத்தலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மகாசங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஜயசிறி மஹாபோதி மற்றும் ருவன்வெலி மஹாசேய சுற்றிலும் கடும் பாதுகாப்பு வேலியொன்;றை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒழுங்குவிதிகளை திட்டமிடுவதற்கான பௌத்த சாசன விடயங்களை மேற்கொள்வதற்காக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. தொழில் பயிற்சி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை அபிவிருத்தி (நிகழ்ச்சி நிரலில் 26ஆவது விடயம்)

தொழில் பயிற்சி அலுவல்கள் அபிவிருத்தி சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினர் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குதல் மற்றும் தொழில் நுட்ப ஒத்ழைப்பை வழங்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 11 மில்லியன் யுரோக்களுடனான தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கு ஜேர்மன் அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதில் 7 மில்லியன் யுரோக்களில் மாத்தறை மற்றும் கிளிநொச்சியில் உள்ள தொழில் பயிற்சி மத்திய நிலையங்களில் தொழில் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மேலும் 3.5 மில்லியன் யுரோக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினரின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்திற்கு பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த 11 மில்லியன் யுரோக்களை தொழில்நுட்ப உதவியாக பெற்றுக்கொள்வதற்காக ஜேர்மனியுடன் உடன்படிக்கையை எட்டுவதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கூட்டுறவு துறையை ஒழுங்குறுத்துவதற்கான திருத்த சட்டமூலத்தை மேற்கொள்ளுதல் (நிகழ்ச்சி நிரலில் 37ஆவது விடயம்)

தற்பொழுது நாடு முழுவதிலும் 2269 கூட்டுறவு கிராமிய வங்கிகளும் 17 கூட்டுறவு கிராமிய சங்கங்களும் நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் 8004 செயல்படுகின்றன. இதே போன்று கூட்டுறவு கிராமிய வங்கி கட்டமைப்பின் மூலம் சுமார் 115 பில்லியன் ரூபா அங்கத்தவர் மற்றும் அங்கத்தவர்கள் அல்லாதோரின் வைப்பீடாக இடம்பெற்றுள்ளதுடன் 59.8 பில்லியன் ருபா நிதி மொத்தக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எனைய நிதி சேவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 104 மில்லியன் ரூபா நிதி வைப்பீடுகளாக திரட்டப்பட்டுள்ளன. அத்தோடு சுமார் 95 பில்லியன் ரூபா மொத்த கடனாக வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வர்த்தகம் மேலே குறிப்பிட்ட வகையில் நிதி ரீதியில் வழுவடைந்த போதிலும் சில நிதி சேவை கூட்டுறவு சங்கங்களில் சீர்குலைந்த நிதி முகாமைத்துவத்தின் காரணமாக முதலீடு நஷ்டத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் நிதி பாதுகாப்பு நிலைமைக்கு உள்ளாகியிருப்பதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு நிதித்துறையில் எதிர்கொள்ளப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்தல் கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் ஏனைய நிதி சேவை ஒழுங்குருத்தல் கண்காணிப்பு மேம்பாடு மற்;றும் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் நாளாந்த நிதியை வழங்குவதற்காக திருத்த சட்ட மூலத்தை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கூட்டுறவுத்துறை பிர்ச்சினை தீர்விற்கு சிபாரிகளை சமர்பிப்பதற்கென புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமித்தல் (நிகழ்ச்சி நிரலில் 38ஆவது விடயம்)

நாட்டில் போன்றே சர்வதேச ரீதியில் விரிவான மற்றும் செயல்திறன் மிக்க சேவையை வழங்கி பொது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு வர்த்தகம் உன்னதமான பங்களிப்பை வழங்குகின்றது. இருப்பினும் நாட்டில் கூட்டுறவுத் துறையில் அரசியல் மயப்படுத்தல் சிறப்பற்ற முகாமைத்துவம் மற்றும் நிர்வாகப் பிரச்சனை போன்ற நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதனால் மொத்த கூட்டுறவு முறையில் தற்பொழுது நிலவும் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அதற்காக கூட்டுறவு நிதி கட்டமைப்புக்குள் இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக புத்தி ஜீவிகள் சபையொன்றை நியமிப்பதற்கென கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் நீண்ட காலம் இடம்பெயர்ந்த நபர்களை மீளக்குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி மற்றும் திறனாற்றல் அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன்; அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10.பொலன்னறுவை புனித நகரத்திற்கான பிரவேச வீதி ஆரம்பிக்கும் இடத்தை நுழைவாயில் கோபுரத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 53ஆவது விடயம்)

எழுச்சி பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக மரபுரிமை நகரமாக பொலன்னறுவை புனித நகரத்திற்கு அருகாமையில் வலய அபிவிருத்திக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொலன்னறுவை நகரத்தை பார்வையிடுவதற்காக வரும் சுற்றுலா பயணிகளை கவரக் கூடிய வகையில் பொலன்னறுவை புனித நகரத்திற்குள் பிரவேசிக்கும் ஹதமுன சந்திக்கருகாமையில் பொலன்னறுவை பிரஜைகளின் எதிர்காலத்தை வெளிப்படுத்தும் வகையில் கோபுரமொன்றை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. யாழ்ப்பாணம், ருஹுணு மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்தல் (நிகழ்ச்சி நிரலில் 67ஆவது விடயம்)

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் பல்கலைக்கழகங்களுக்கு தேவையான கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்படட்டுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் வவனியா பீடத்திற்கு 2 மாடி நூல் நிலைய கட்டிடமொன்றை நிர்;மாணிக்கும் ஒப்பந்தம் 312.2 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும் ரூஹுணு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்திற்காக 10 மாடிகளைக் கொண்ட வார்ட்டுத் தொகுதியொன்றை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 1138.3 மில்லியன் ரூபாவிற்கு மத்திய பொறியியலாளர் சேவை தனியார் நிறுவனத்திடமும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சுகாதார விஞ்ஞான பீடத்திற்காக 5 மாடி கட்டிடத் தொகுதியொன்றையம் நிர்மாணிக்கும் திட்டம் 378.8 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட கே.எஸ்.ஜே தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தக்காரரிடமும் வழங்குவதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய நகரத்திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12.வாய் வழி மற்றும் முகம் தொடர்பான சத்திர சிகிச்சையின் போது பயன்பாட்டுக்கான உபகரணங்களுக்கான பெறுகை (நிகழ்ச்சி நிரலில் 68ஆவது விடயம்)

வாய் வழி மற்றும் முகம் தொடர்பில் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை பயன்பாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் பெறுகை மேல் முறையீட்டு சபையின் சிபாரிசுக்கமைய 201542.90 ரூபாவிற்கு கொரியாவின் MS .Ostenic Co.Ltd எம்.எஸ் ஒட்சிகோமினி ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. சபுகஸ்கந்த அனல் மின் நிலையத்தை தொடர்ச்சியாக செயல்படுவதை உறுதி செய்தல் (நிகழ்ச்சி நிரலில் 70ஆவது விடயம்)

152 மெகாவோல்டைக் கொண்ட சபுகஸ்கந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தை தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக அதன் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என்ஜின் வகைகளின் இல 5 ,7 ,8, 10 ஆகிய என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்;டின் போதும் மணித்தியாலத்திற்கு 6000 மெகாவோல்ட் நேர அட்டவணையும் இல 6,9,11,12 கொண்ட என்ஞின்கள் ஒவ்வொரு செயற்பாட்டின் போதும் 12 ஆயிரம் மணித்தியாலங்கள் செயற்பாட்டு காலத்திற்கு ஒரு முறை தேவையான வகையில் மேலதிக உதிரிபாகங்களை கொள்வனவு செய்வதற்காக ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய 1.1மில்லியன் ரூபாவிற்கு இதன் ஆரம்ப தயாரிப்பாளரான ஜேர்மனியை சேர்ந்த Ms.MAN Energy Solution Se என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. சூரிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மற்றும் மொனராகலை கிரிட் துணை கோபுரங்கள் இரண்டிற்காக ஒரு மொகாவோல்ட் உற்பத்தி திறனைக் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தல் (நிகழ்ச்சி நிரலில் 71ஆவது விடயம்)

சூரிய சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் மத்திய நீர்த்தேக்கத்துடன் தொடர்புபட்ட சிறிய அளவிலான 90 சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக பொருத்தமான கிரிட் உப நிலையங்கள் 17 அடையாளங் காணப்பட்டுள்ளது. அவற்றுள் திருகோணமலை கிரிட் துணை நிலையத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள ஒரு மெகாவோல்ட் மின் உற்பத்தி வலுவவைக் கொண்ட 7 திட்டங்களில் 3 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட சன்கோர் சோலர் சிட்டி அமைந்துள்ள தனியார் நிறுவனத்திடம் எஞ்சிய நான்கு திட்டத்தை வரையறுக்கப்பட்ட கெபிடல் சிட்டி ஹோல்டிங் தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கும் மொனராகலை கிரிட் துணை கோபுரத்திற்கான தொடர்புகளை மேற்கொள்வதற்காக எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகாவோல்ட் மின் வலுவைக் கொண்ட சூரிய சக்தி திட்டம் 5 இல் 4 திட்டங்கள் வரையறுக்கப்பட்ட ஹோல்டன் கோப்ரேஷன் லங்கா தனியார் நிறுவனத்திடமும் எஞ்சிய திட்டம் வரையறுக்கப்பட்ட நியோன் கிரீன் பவர் கம்பனி தனியார் நிறுவனத்திடம் வழங்குவதற்கு அமைச்சரவையினால் நியமிக்கப்ட்ட கலந்துரையாடல் இணக்கப்பாட்டு குழுவின் சிபாரிசுக்கமைய வழங்குவதற்காக மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கை துறைமுக அதிகார சபையில் கடற்படை வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் (நிகழ்ச்சி நிரலில் 74ஆவது விடயம்)

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி வழங்கப்படும் துறைமுக பிரவேச விமான பெருந்தெருக்களை நிர்மாணிக்கும் திட்டத்தில் இலங்கை துறைமுக அதிகார சபையில் நவீன வசதிகளை வழங்கும் மத்திய நிலையத்தின் பணிகளுக்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட நிலையியல் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 624 மில்லியன் ரூபாவிற்கு வரையறுக்கப்பட்ட எக்சஸ் இன்ஞினியரிங் நிறுவனத்திடம் வழங்குவதற்காக பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. காலி மாவட்டத்தில் தேசிய பெருந்தெருவில் 51.7 கிலோமீற்றரை மேம்படுத்துதல் (நிகழ்ச்சி நிரலில் 75ஆவது விடயம்)

தெற்கு, சப்ரகமுவ,மத்திய, வடமேல, வடமத்திய மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் முக்கிய சமூக பொருளாதார மத்திய நிலையத்துடன் கிராமிய பிரதேசங்களுடனான தொடர்புகளை மேம்படுத்துவதற்காக பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் காலி மமாவட்டத்தில் 51.7 கிலோமீற்றர் பெருந்தெருவை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீதியை அபிவிருத்தி செய்து பராமரிப்பு நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட கே.டி. வீரசிங்க தனியார் நிறுவனத்தினால் சீனாவின் Yunnan construction and investment  holiding group co.Ltd என்ற நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டு வர்த்தகத்திடம் 6108.2 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்கு பெருந்தெருக்கள் வீதி அபிவிருத்தி மற்றும் கனிய வள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 17. திருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 76ஆவது விடயம்)

திருகோணமலை நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள திருகோணமலை உயர்நீதிமன்றம் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் நீதவான் நீதிமன்றம் மேலதிக நீதவான் நீதிமன்றம் மற்றும் தொழிலாளர் நம்பிக்கை சபைக்காக பயன்படுத்தப்படும் கட்டிடத் தொகுதியில் குறைந்த இட வசதியின் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வருகை தரும் பொதுமக்களைப் போன்று அதன் பணியாளர்களுக்கும் பெறும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதற்கமைவாக நீதிமன்ற சேவைக்காக போதுமான இடவசதி வழங்கும் எதிர்பார்ப்புடன் 250 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் புதிய கட்டிடமொன்று நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியல் பணி தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் வழங்குவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரள அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

18. வலப்பனையில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்தல் (நிகழ்ச்சி நிரலில் 77ஆவது விடயம்)

வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் மூலம் வலப்பனை, தெரிபெஹ, ராகலை, உடபுசல்லாவ, மதுரட்ட, மந்தாரம் நுவர மற்றும் அங்குரான்கெத்த ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாக நீதிமன்ற சேவை வழங்கப்படுகிறது. அவ்வாறிருப்பினும் இதற்காக பயன்படுத்தப்படும் கட்டிட வசதி இல்லாத இருக்கும்; வரையறுக்கப்பட்ட இட வசதியின் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியள்ளது. இதனால் வலப்பனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்காக புதிய கட்டிமொன்றை நீதிமன்ற வளவில் 212.3 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை சேவை ஒப்பந்தம் பொறியியலாளர் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனை அலுவலகத்திடம் கையளிப்பதற்காக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துகோரல அவர்கள் சமர்ப்பித் ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

19. 2019 சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகித்தல் (நிகழ்ச்சி நிரலில் 79ஆவது விடயம்)

2019ஆம் ஆண்டுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க கடன் பெற்றுக்கொள்ளும் வரையறைக்குள் செயல்பட்டு சர்வதேச வர்த்தக தரத்தை கவனத்தில் கொண்டு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தில் சர்வதேச இறையாண்மை பிணைமுறிகளை விநியோகிப்பதன் மூலம் விநியோகிப்பதற்கான தேவiயான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

20. என்டர்பிரைஸ் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி வசதிகளை விரிவுப்படுத்தல். (நிகழ்ச்சி நிரலில் 80 ஆவது விடயம்)

அரசாங்கத்தின் முக்கிய வேலைத்திட்டமான என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் இளைஞர் யுவதிகள் மகளிர் தொழில் முயற்சியாளர்கள் சுய தொழில் முயற்சி பயனாளிகள் பட்டதாரிகள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோர்களுக்காக 17 நிவாரண வட்டிக்கடன் பரிந்துரைகள் 3 கடன் திட்ட முறை மற்றும் நிதி அல்லாத வசதிகளை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் இரண்டும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்தோடு இது வரையில் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக சுமார் 81 மில்லியன் ரூபா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பங்களிப்பு செய்யும் பல்வேறான தரப்பினரின் கோரிக்கையை கவனத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் கடன் முன்மொழிவின் ஊடாக வழங்கப்படும் நன்மைகளை மேலும் விரிவுப்படுத்துதல் மற்றும் இந்த கடன் முன்மொழிவு முறையை நடைமுறைப்படுத்தும் பொழுது எதிர்க்கொள்ளப்படும் தொழில் நுட்ப பிரச்சினைகளை குறைக்கும் நோக்கில் ரண் அஸ்வென்ன ரியசக்தி ஹோம் சுவீட் ஹோம் சீன மாளிகா சிட்டி ரைட் ஜய இசுறுமினி டெக்ஷி மின்சார முச்சக்கரவண்டி மற்றும் எனது எதிர்காலம் போன்ற கடன் முன்மொழிவுகளை பொது மக்களுக்கு மேலும் பலன்கள் மற்றும் நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

21.நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்கான துரிதமான வேலைத்திட்டம் (நிகழ்ச்சி நிரலில் 83 ஆவது விடயம்)

அரசாங்க மற்றும் தனியார் துறை இரண்டிலும் நடுத்தர வருமான சம்பளத்தை பெறுவோருக்கு வீட்டு வசதிகளை வழங்கும் நோக்குடன் நடுத்தர வருமான வீடு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித வேலைத்திட்டம் அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீடொன்றை கொள்வனவு செய்வதற்காக ஆகக் கூடிய தொகையாக 5 மில்லியன் ரூபா கடனை 7சதவீத வட்டியின் கீழ் பெற்றுக்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் தற்பொழுது பொருளாதார சூழ்நிலைக்கு அமைவாக இந்த கடன் திட்டத்தின் கீழ் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ள பயனாளிகளின் கோரிக்கையை கவனத்திற் கொண்டு இந்த நிவாரண பரிந்துரை முறையின் கீழ் வழங்கப்படும் கடன் தொகையை 10 மில்லியன் ரூபா வரையில் அதிகரிப்பதற்கும் அதற்கான வட்டி வீதத்தை 6 சதவீதமாக குறைப்பதன் மூலம் பெரும்பாலானவர்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் தெரிவு செய்யும் திருத்;தத்தை மேற்கொள்வதற்கு தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள் குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சர் கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் சமர்ப்பித்த ஒன்றிணைந்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

22.பஸ் தரிப்பு மற்றும் ரயில் நிலையங்களில் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துதல். ( நிகழ்ச்சி நிரலில் 85 ஆவது விடயம்)

ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் தரிப்பு நிலையங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லை என்பதினால் இந்த இடங்களில் உள்ள இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்துவதற்கு 2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வீடமைப்பு நிர்மாணத்துறை கலாச்சார அலுவல்கள் அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் இணைப்புடன் இயற்கை கழிவறை வசிதிகளை மேம்படுத்தப்பட வேண்டிய பொது இடங்களை அடையாளங் கண்டு இந்த திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்காக நிதி அமைச்சர் மங்கள் சமரவீர அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

23.சமுர்த்தி பயனாளிகளை வலுவூட்டுதல் (நிகழ்ச்சி நிரலில் 89 ஆவது விடயம் )

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இது வரையில் 1.4 இலட்சம் குடும்பங்கள் நன்மைகளை பெற்று வருவதுடன் மேலும் 6 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் கிடைக்க கூடிய வகையில் அரசாங்கத்தினால் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும் 2 வருட கால பகுதியில் 5000 குடும்பங்களை வலுவூட்டுவதற்கும் 50000 உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் உத்தேசிக்கப்ட்டுள்ளது. இதே போன்று சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார பிரதேசங்களில் 5000 ஏற்றுமதி கிராமங்களை ஸ்தாபிக்கப்படவுள்ளது. அத்தோடு இதன் மூலம் பொருளாதார பயிர் மற்றும் ஏற்றுமதி பயிர் உற்பத்தியை மேம்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் துறையை நடைமுறைப்படுத்துவதற்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். சமுர்த்தி பயனாளிகளின் பொருளாதாரத்துக்கும் ஏற்றுமதி துறைக்கும் பங்களிப்பு செய்யும் மனித வள சக்தியாக வலுவூட்டும் மனநிலையை ஏற்படுத்துவோருக்காக தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயாகமகேவினால் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

24. தேசிய பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக கமரெக்கும என்ற அமைப்பு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தல் (நிகழ்ச்சி நிரலில் 91 ஆவது விடயம்)

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களின் பொதுவான வாழ்க்கை மற்றும் பொருளாதார நிலையை மீண்டும் வழமை நிலைக்கு முன்னெடுத்து அவர்களின் எண்ணங்களில் உறுதியை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு பிரவை போன்று அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பு அவசியமானதாகும். இதற்கமைவாக பொது மக்களின் பல்வேறான பாதுகாப்பு தேவவையை நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய கமரெக்கும என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் சுயேட்சை பொது மக்கள் அமைப்பை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கும் தேவையான வசதிகளை செய்வதற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top