வடக்குகிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்
– ஆரம்பித்து வைத்தார் ரணில்
20 ஆயிரம் பட்டதாரிகளை
ஆட்சேர்ப்புச் செய்யவுள்ளதாகவும் தெரிவிப்பு



வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய பிரதமர், 2019ஆம் ஆண்டில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக, 50 பில்லியன் ரூபாவை மூலதனச் செலவினமாக அரசாங்கம் ஒதுக்கியிருப்பதாக கூறினார்.

அழிவுகளைச் சந்தித்த பகுதிகளின் அபிவிருத்திக்காக, பனை நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளின்  பல்வேறு முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்த நிதியத்தை பயன்படுத்த முடியும்.

இந்த நிதியம் தவிர்ந்த,  கம்பெரலிய திட்டத்தின் கீழ் 7 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அத்துடன் இரண்டு மாகாணங்களிலும். 2000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

20 ஆயிரம் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். வடக்கு கிழக்கைச் சேர்ந்த பட்டதாரிகளும் இந்த ஆட்சேர்ப்பில் உள்வாங்கப்படுவர்.” என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top