மருத்துவர்
மொஹமட் சாஃபி க்கு எதிராக
தற்போது அம்மா.
பாட்டிமார், அத்தைமார்
என்போர் முறையிட்டு
வருகின்றனர்
-
ஆளுநர் அசாத் சாலி
ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்!
பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
மேல்
மாகாண ஆளுநர்
அசாத் சாலியை
பதவிநீக்கம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவரும்
நிலையில் அவரைக்
கைது செய்யும்படி
பொலிஸ் தலைமையகத்தில்
இன்றைய தினம்
முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிங்கள
பௌத்த கடும்போக்குவாத
அமைப்புகளில் ஒன்றான புதிய சிங்கள அமைப்பு
இந்த முறைப்பாட்டை
செய்திருக்கிறது. 4000 சிங்கள தாய்மாருக்கு
சட்டவிரோதமாக கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்துள்ள குருநாகல்
போதனா வைத்தியசாலை
மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி
க்கு எதிராக
இதுவரை நூற்றுக்கும்
மேற்பட்ட முறைப்பாடுகள்
பதிவாகியுள்ளன.
அண்மையில்
குருநாகலை வைத்தியசாலைக்கு
சென்ற சுயாதீன
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர்
மேல் மாகாண
ஆளுநர் அசாத்
சாலி இந்த
விவகாரத்தில் தலையிட்டு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி
இடையூறு செய்து
வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதேபோல
ஏப்ரல் 21 தாக்குதலையடுத்து
மேல் மாகாண
ஆளுநர் அசாத்
சாலி, கிழக்கு
மாகாண ஆளுநர்
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும்
அமைச்சர் ரிசாத்
பதியூதீனுக்கு எதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த மஹிந்த
தலைமையிலான கட்சியினரும், கடும்போக்கு சிங்கள பௌத்த
அமைப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் அவர்களது
பதவிகளை பறிக்குமாறும்
ஜனாதிபதியை வலியுறுத்தி வருகின்றன.
இந்த
நிலையில் அத்துரலியே
ரத்தன தேரரின்
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள மேல்
மாகாண ஆளுநர்
அசாத்சாலி, அத்துரலியே ரத்தன தேரர் எதிர்கட்சித்
தலைவர் மஹிந்த
ராஜபக்ஸ தலைமையிலான
ஸ்ரீலங்கா பொதுஜன
முன்னணியின் பணிகளை கச்சிதமாக நிறைவேற்றி வருவதாக
விமர்சித்திருந்தார்.
இது
தொடர்பில் ஆளுநர்
அசாத்சாலி கருத்துத்
தெரிவிக்கையில்,
நான்
குருநாகல் வைத்தியசாலைக்கு
சென்றேன். முதலில்
4000 கருத்தடை சத்திரசிகிச்சை என்று செய்தி வெளிவந்தது.
பின்னர் 8000சிசேரியன் செய்தார் என்று செய்தி
வெளியாகியது. தற்போது அம்மா. பாட்டிமார், அத்தைமார்
என்போர் முறையிட்டு
வருகின்றனர்.
எனவே
இதுகுறித்து முழுமையான விசாரணையை நடத்தும்படி சுகாதார
அமைச்சர் ராஜிதவிடம்
கோரினேன். பொலிஸ்மா
அதிபருக்கோ, வைத்தியசாலை பணிப்பாளருக்கோ
அழுத்தம் கொடுக்கவில்லை.
ரத்தன தேரர்
இறுதியாக எந்தக்
கட்சியில் இணைந்திருக்கிறார்
என்பதை மக்கள்
அறிவார்கள்.
ஜாதிக
ஹெல உறுமயவிலிருந்து
சங்கை தூக்கிச்
சென்று ஐக்கிய
தேசியக் கட்சியின்
தேசியப் பட்டியலில்
இருந்துகொண்டு தற்போது மொட்டுக் கட்சியின் பணிகளை
நிறைவேற்றிவருகின்றார். யாரையும் பாதுகாக்க
வேண்டிய அவசியமில்லை.
விசாரணை முடியும்வரை
பொறுத்திருங்கள். முன்னர் வந்த அந்த மலட்டுத்தன்மையை
ஏற்படுத்தும் மாத்திரைகள் போலவே இதுவும் காணப்படலாம்.
ஆளுநர்
பதவியை வைத்து
நாம் செயற்படுகின்றோம்.
அந்த அதிகாரத்திற்கும்
மேலாகச் சென்று
நாம் செயற்பட்டால்
நீங்கள் சுட்டிக்காட்டலாம்
என தெரிவித்திருந்தார்.
மேல் மாகாண
ஆளுநரின் இந்தக்
கருத்திற்கு எதிராக புதிய சிங்கள அமைப்பு
கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் இன்றைய தினம்
முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்தது.
ஆளுநர்
அசாத் சாலி
பௌத்த பிக்கு
ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை கொடுக்கத்
தவறியதாகவும், அதனால் அவர்மீது விசாரணை நடத்த
வேண்டும் என்றும்
முறைப்பாட்டு செய்ததாக நவ சிங்கள அமைப்பின்
தலைவர் டான்
பிரியசாத் தெரிவித்தார்.
அவர்
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மேல்
மாகாண ஆளுநர்
அசாத் சாலிக்கு
எதிராக பதில்
பொலிஸ்மா அதிபரிடம்
முறையிட்டோம். ஊடகங்களுக்கு முன்பாக அத்துரலியே ரத்தன
தேரரை அகௌரவப்படுத்தும்
வகையிலான சொற்பிரயோகங்களை
அவர் மேற்கொண்டிருக்கின்றார்.
அவர் யார்?அவர் கூறுவதை
நாம் கேட்கமாட்டோம்.
அவருக்கு பயமில்லை
போன்று அசாத்
சாலி கூறியுள்ளார்.
பௌத்த
பிக்கு ஒருவருக்கு
கொடுக்க வேண்டிய
மதிப்பிற்குரிய வார்த்தைகளை அசாத் சாலி பயன்படுத்தாததினால்
இது மிகப்பெரிய
அகௌரவப்படுத்தல் என்று சுட்டிக்காட்டுகின்றோம்.
பௌத்த நாடு
என்ற வகையில்
இந்த நாட்டின்
இப்படியான ஆளுநரையா
ஜனாதிபதி இன்னும்
பதவியில் வைத்திருக்கின்றார்.
பௌத்தர்கள் என்ற வகையில் பௌத்த பிக்குமாரை
வணங்கி ஆசிபெறுவோம்.
அப்படிப்பட்டவர்களை
தரக்குறைவான சொற்களைக் கொண்டு பேசுகின்ற அசாத்சாலி
இந்நாட்டில் முடிந்துவரும் பிரச்சினைகளை
மீளக் கிளர்வதற்கு
முயற்சிக்கின்றார். அதேபோல அவருடைய
இனங்களைக் குறித்துப்
பேசுவதற்கு தமக்கு உரிமையிருப்பதாகவும்,
இனவாதப் பிரிவுகளே
பிரச்சினைகளை கிளர்வதாகவும் அசாத்சாலி கூறுகின்றார்.
ஆம்
கடந்தகாலங்களில் அவர்களுடைய இனம் செய்த குண்டுவெடிப்பு
அழிவுகளை நாம்
கண்டோம். சட்டவிரோத
கருத்தடை மூலம்
சிங்கள இனத்தை
அழிப்பதற்கு எதிராக எமது இனத்தவர்கள் வீதியிலிறங்கிப்
போராடவும் முறையிடவும்
உரிமையிருக்கிறது.
பௌத்த
பிக்குகளே இந்த
நாட்டை பாதுகாத்து
வருகின்றனர். இப்படிப்பட்ட ஆளுநரை உடனடியாக ஜனாதிபதி
பதவி நீக்கம்
செய்ய வேண்டும்
என்று வலியுறுத்துகின்றோம்.
அதேபோன்று அசாத்சாலி
பகிரங்க மன்னிப்பும்
கோர வேண்டும்
எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment