இது எப்படியிருக்கிறது?
சாரதிக்காக 'இந்து' அதிகாரி
'நோன்பு' கடைப்பிடிக்கிறாராம்!


மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புல்தானாவில், தனது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வாகன சாரதிக்காக ரமழான் மாதகால நோன்பை கடைப்பிடிக்கிறார், இந்து சமயத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர். இது மதநல்லிணக்க சின்னம் இது என்கிறார் அவர்.

புல்தானா நகரில், மண்டல வனத்துறை அதிகாரியாக இருப்பவர் சஞ்சய் மாலி. இவர் கடந்த மே மாதம் 6  முதல் புனித ரமழான் மாத நோன்பு இருந்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், '' எனது டிரைவர் ஜாபர். அவரிடம் கடந்தமாதம் 6 ம் திகதி ரம்ஜான் நோன்பு குறித்து கேட்டேன். அவரோ, பணியின் காரணமாக நோன்பு இருக்க உடல்நிலை அனுமதிக்க வில்லை என்று வருத்தத்துடன் கூறினார்.
எனவே, அவரது இடத்தில் நான் நோன்பு இருக்க முடிவு செய்தேன். தினசரி அதிகாலை 4 மணிக்கு எழுந்து சாப்பிட்டு விடுவேன். இது ஸஹர்  எனப்படும். பின்னர் காலை 7 மணி முதல் நோன்பு தொடரும். மாலை உணவு இப்தார் என்றும் அழைக்கப்படுகிறது. நான் நோன்பு மூலம் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.

எல்லா மதங்களுமே நமக்கு சில நல்ல விசயங்களை கூறுகின்றன. கடவுள் நம்பிக்கையை விடவும் மனிதாபிமானத்தையே நாம் முன்னிறுத்தவேண்டும். நான் எனது புனித ரமழான் மாத நோன்பை மதநல்லிணக்க சின்னமாகவே பார்க்கிறேன்,'' என்று வனத்துறை அதிகாரி சஞ்சய் மாலி தெரிவித்துள்ளார்.  .

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top