புதிதாக  நீர் இணைப்பு கட்டணம்
8,000 ரூபா பணம்,
2500 ரூபா வரை குறைப்பு



புதிதாக நீர் இணைப்பை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் 8,000 ரூபா பணம், இரண்டாயிரத்து 500 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. குழாய் நீர் வசதியை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

இலங்கை மக்கள் தொகையில் 41 வீதத்தை உள்ளடக்கி 2.4 மில்லியன் குடி நீர் விநியோகத்திற்கான இணைப்புக்கள் தற்பொழுது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் பொதுவாக 110,000 வீட்டு நீர் விநியோக வசதிகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன.

இருப்பினும், தற்பொழுது உள்ள குழாய் கட்டமைப்பு மூலம் உள்ளடக்கப்படாத வீதி / பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் நீர்க்குழாய் விநியோக வசதி விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த நீர் இணைப்பு தொடர்புகளை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 20,000 ரூபா வரையிலான ஆரம்பக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதுடன் மற்றும் வீதி புனரமைப்புக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளமை போன்ற விடயங்களின் அடிப்படையில் மேலதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்த போதிலும் அந்த பிரதேச நுகர்வோருக்கு வீட்டு குடிநீர் இணைப்பு தொடர்புகளை வழங்குவதற்கு முடியாமல் உள்ளது. 

இதில் உள்ள இடையூறுகளை நீக்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு 2020ஆம் ஆண்டில் முதல் காலண்டு 2 இற்குள் புதிதாக 150,000 வீடுகளுக்கான நீர் விநியோக இணைப்புத் தொடர்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர , நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top