04.03.2020 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்
 மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்



1. இலங்கையில் நிதி சார்ந்த உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிதி சார்ந்த மூலோபாயம் (National Financial Inclusion Strategy ) தொடர்பான நடைமுறையை தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல்

சமூகத்தில் அனைவருக்கும் மற்றும் தொழிற்துறையினருக்கும் கட்டுப்படக்கூடிய செலவின் கீழ் தேவையான சந்தர்ப்பங்களில் முறையான நிதி சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உள்ள ஆற்றல் 'நிதி சார்ந்த உள்ளடக்கம்' என்று கருதப்படுகின்றது. செலுத்துதல் , சேமித்தல் , கடன் , காப்புறுதி மற்றும் ஓய்வூதியம் போன்ற நிதியியல் கருவிகள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அனைத்து பிரஜைகளுக்கும் வசதிகளை செய்து கொடுக்கும் உத்தேச தேசிய நிதி சார்ந்த மூலோபாயம் தொடர்பான தேசிய நடைமுறையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்பம் மற்றும் நிதி ஒத்துழைப்புடன் இலங்கை மத்திய வங்கியினால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பங்களிப்புடன் இலங்கையில் நிதி சார்ந்த மூலோபாயத்தை மேம்படுத்தவது தொடர்பான தேசிய நடைமுறை (National Financial Inclusion Strategy ) மற்றும் அதற்கான செயற்பாட்டுத் திட்டம் வகுக்கப்படும். இதன் நிதிசார்ந்த உள்ளடக்கம் தொடர்பான தேசிய நடைமுறைக்கு அமைவான உத்தேச செயற்பாட்டு திட்டத்திற்கு அமைய நடைமுறைப்படுத்துவதற்காக நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2. களுத்துறை போதி சூழலில் அமைந்துள்ள காணியை விடுவிப்பு கொடுப்பனவு பத்திரத்தின் மூலம் களுத்துறை போதி அறக்கட்டளை சபைக்கு நன்கொடையாக வழங்குதல்

களுத்துறை போதி அறக்கட்டளை சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள சுமார் 7 ½ ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட 7 காணித்துண்டுகளை இந்த அறக்கட்டளை சபையிடம் காணி ஆணையாளர் திணைக்களத்தினால் நீண்டகால 3 குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு காணித்துண்டை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறை போதி அறக்கட்டளை சபையினால் இந்த திணைக்களத்திடம் கோரிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணி அனைத்தும் சிறப்பான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என்பதினாலும் களுத்துறை போதி அறக்கட்டளை சபைக்கு பெற்றுக் கொடுக்கும் புனித பூமி அபிவிருத்திக்கு பெரும் பின்புலமாக அமையும் என்பதினால் இந்த காணிகளை சுதந்திர கொடுப்பனவு என்ற ரீதியில் பெற்றுக் கொடுப்து பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக தற்பொழுது குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இதன் காணி துண்டொன்றை சுதந்திர கொடுப்பனவு என்ற ரீதியில் களுத்துறை போதி அறக்கட்டளை சபைக்கு வழங்குவதற்கும் தற்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் எஞ்சிய காணியை எதிர்காலத்தில் அபிவிருத்தி பணிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் பெற்றுக் கொடுக்கப்படும் போதுமான இழப்பீடின்றி மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக , நீண்டகால குத்தகை என்ற ரீதியில் இந்த அறக்கட்டளை சபைக்கு வழங்குவதற்கும் பௌத்த சாசன , கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

03. இலங்கையின் அருவமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்பாட்டுக்காக நிலையான நிறுவன கட்டமைப்பொன்றை அமைத்தல்

அருவமான கலாச்சார பாரம்பரியத்தை (Intangible Cultural Heritage) எதிர்கால பரம்பரையினருக்காக பாதுகாக்கும் நோக்கில் 2003 ஆம் ஆண்டில் 'கலாச்சார மரபுரிமை பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச இணக்கப்பாடு' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் இலங்கை 2008ஆம் ஆண்டில் இந்த இணக்கப்பாட்டிற்கு உடன்பாடு தெரிவித்திருந்தது. விசேடமாக சமூக பழக்க வழக்கங்கள் கண்காட்சி , வெளியீடுகள் , அறிவு திறனாற்றல் , கலாச்சாரம் சந்தர்ப்பங்கள் மற்றும் அவை சார்ந்துள்ள பொருட்கள் மற்றும் கருவிகள் முதலானவை கலாச்சார மரபுரிமை என்ற ரீதியில் இருப்பதுடன் மேற்கத்தேயமயமாக்கல் உலகளாவிய , வணிகமயம் மற்றும் மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சவால்கள் மத்தியில் இந்த அருவமான கலாச்சார பாரம்பரிய மரபுரிமையை பாதுகாப்பதற்கும் அவற்றை மேம்படுத்துவதற்கும் , அதற்கு பொருத்தமான அணுகுமுறையை தயாரிப்பதற்கும் மேலே குறிப்பிடப்பட்ட சர்வதேச இணக்கப்பாட்டின் விதிகளுக்கு அமைவாக இலங்கை கட்டுப்பட்டுள்ளது.  இந்த பணிகளுக்காக தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட பொருத்தமான நிறுவனமொன்று இல்லாததினால் மேலே குறிப்பிடப்பட்ட இணக்கப்பாட்டின் விதிகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கின்றது என்பதினால் கலாச்சார அமைச்சின் கீழ் அருவமான கலாச்சார பாரம்பரிய மரபுரிமை தொடர்பாக செயல்படுவதற்காக விசேட அலகு ஒன்று அமைப்பதற்கு பௌத்த சாசன மற்றும் கலாச்சார மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

04. இலங்கையின் அரச ஆசியர் (சமூகம்) ஆசிய சங்கத்தின் (Royal Asiatic Society of Sri Lanka )175ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுதல்

1845ஆம் ஆண்டில் அப்போது இருந்த பெரிய பிரித்தானியாவின் நிர்வாக பொறியினால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கையின் அரச ஆசியர் (சமூகம்) சங்கத்தினால் அக்காலப்பகுதிக்குள் இந்த நாட்டின் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு சாத்தியக்கூற்றை அடையாளம் காணுதல், அரச நிர்வாக கட்டமைப்பை வகுத்தல் மற்றும் கிராம மக்களின் வரலாற்று முக்கியத்துவமிக்க மற்றும் கலாச்சார பின்புலம் தொடர்பாக பகுப்பாய்வு பணிகளை மேற்கொண்டு அந்த தகவல்களை மதிப்பீடு செய்து அது தொடர்பிலான சிபாரிசுகளை சமர்ப்பிப்பதன் மூலம் காலனித்துவ காலப்பகுதியில் அரச பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. காலனித்துவ அரசில் பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த சங்கம் பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட காலனித்துவ காலப்பகுதியில் நற்பெயரைக் கொண்ட நிறுவனம் என்ற ரீதியில் செயல்பட்டுள்ளதுடன் ஆளுநரின் உத்தியோகபூர்வ அதிகாரத்தில் இந்த சங்கத்தின் காப்பாளர் நிறுவனம் என்ற ரீதியில் செயல்பட்டுள்ளது. இதேபோன்று சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், எச்.சி.பி பேல் , போல். பீரிஸ், பி..பீ தெரணியகல, செனரத் பரனவிதான , ஜீ.சி.மென்டிஸ், சி. கொட்டகும்புர, ஜீ.பி மலலசேகர போன்ற அப்பொழுது இலங்கையில் இருந்த பிரபல புத்திஜீவிகள் பலர் இந்த சங்கத்தின் செயற்பாட்டு அங்கத்தவர்களாக பணியாற்றியுள்ளனர். இந்த சங்கத்தின் 175ஆவது ஆண்டு நிறைவு இந்த வருடத்தில் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி அன்று இடம்பெற்றிருந்ததுடன் அதனை முன்னிட்டு விசேட வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள உன்னதமான பணி மற்றும் பொறுப்புக்களைப் பாராட்டுவதற்காக இந்த வேலைத்திட்டத்திற்காக செலவாகும் தொகையை உள்ளடக்குவதற்காக 15 மில்லியன் ரூபாவை மானியமாக ஒதுக்கீடு செய்வதற்காக பௌத்த சாசன மற்றும் கலாச்சார மத அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

5. 150, 000 வீடுகளுக்கான குடிநீர் இணைப்புக்களை பெற்றுக் கொடுத்தல்

இலங்கை மக்கள் தொகையில் 41 வீதத்தை உள்ளடக்கி 2.4 மில்லியன் குடி நீர் விநியோகத்திற்கான இணைப்புக்கள் தற்பொழுது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையினால் வழங்கப்பட்டுள்ளதுடன் பொதுவாக 110,000 வீட்டு நீர் விநியோக வசதிகள் வருடந்தோறும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், தற்பொழுது உள்ள குழாய் கட்டமைப்பு மூலம் உள்ளடக்கப்படாத வீதி பிரதேசத்தை உள்ளடக்கும் வகையில் நீர்க்குழாய் விநியோக வசதி விரிவுபடுத்தப்பட வேண்டும். இந்த நீர் இணைப்பு தொடர்புகளை பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் 20,000 ரூபா வரையிலான ஆரம்பக் கொடுப்பனவை செலுத்த வேண்டியுள்ளதுடன் மற்றும் வீதி புனரமைப்புக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியுள்ளமை போன்ற விடயங்களின் அடிப்படையில் மேலதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்த போதிலும் அந்த பிரதேச நுகர்வோருக்கு வீட்டு குடிநீர் இணைப்பு தொடர்புகளை வழங்குவதற்கு முடியாமல் உள்ளது.  இதில் உள்ள இடையூறுகளை நீக்குவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு 2020ஆம் ஆண்டில் முதல் காலண்டு 2 இற்குள் புதிதாக 150,000 வீடுகளுக்கான நீர் விநியோக இணைப்புத் தொடர்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர , நீர்வளங்கல் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டுள்ள காணியை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்தல்

நகர அபிவிருத்தி அதிகார சபை கொண்டுள்ள கொழும்பு மாவட்டத்திற்குள் 1 ஏக்கருக்கும் மேற்படாத காணி மற்றும் கொழும்பு மாவட்டத்திற்கு அப்பால் 2 ஏக்கருக்கும் மேற்படாத காணியை குத்தகைக்கு வழங்குவதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரத்தை இந்த அதிகார சபையின் முகாமைத்துவ சபைக்கு வழங்குவதற்கு அமைச்சரவையினால் 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைவாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபையினால் அனுமதிக்கப்பட்ட பின்னர் 1978ஆம் ஆண்டு இல 48 கீழான நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தில் 18 (1) சரத்தின் கீழ் விடயத்திற்குப் பொறுப்பான கௌரவ பிரதமரின் அனுமதியுடன் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட 23 காணிகளுக்கான முன்னேற்றம் தொடர்பாக நகர , நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த தகவல்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

07. இலங்கை சர்வதேச தீர்வுகளுக்கான மத்திய நிலையத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தல்

சர்வதேச வர்த்தக உடன்படிக்கை மற்றும் ஏனைய சர்வதேச தொடர்புகளினால் ஏற்படும் சர்ச்சைகளை தீர்ப்பதற்காக பிராந்திய மத்திய நிலையமொன்றாக இலங்கை சர்வதேச தீர்வுகளுக்கான மத்திய நிலையத்தை அமைப்பதற்கு 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. மேலும் மத்திய நிலையம் என்ற ரீதியில் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக ஸ்தாபிக்கப்படுவதை 2015ஆம் ஆண்டு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன் இதற்கமைவாக , இலங்கை இன்டர்னெஷனல் ஆர்பிரேசன் சென்டர் (அன்ட்) லிமிடெட் நிறுவனம் 2016.12.20ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
சர்வதேச தீர்வுக்கான மத்திய நிலையத்தின் மூலம் பாரிய வருமானம் பெற்றுக் கொள்வதற்கு சில நாடுகள் செயல்பட்டு வருவதுடன் இலங்கையில் சர்வதேச தீர்வுக்கான மத்திய நிலையமொன்றை அமைப்பதன் மூலம் பிராந்திய நாடுகளின் வர்த்தக நடவடிக்கையின் போது ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வாக நாட்டின் தீர்வுக்கான விடயங்களை மத்திய நிலையத்திடம் முன்னிலைப்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் நன்மையானதாக அமையும். இதற்கமைவாக தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள இலங்கை சர்வதேச தீர்வு மத்திய நிலையத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்காக நீதி , மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று எதிர்காலத்தில் அரசாங்க நிறுவனத்தினால் எட்டப்படும் ஒப்பந்தங்களில் தீர்வுகளுக்கு அமைவான விதிகளை உள்ளடக்கும் பொழுது இவ்வாறான பணிகள் இலங்கை சர்வதேச மத்திய நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ரீதியில் ஒழுங்குகள் இதன் உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையினால் மேலும் தீர்மானிக்கப்படுகின்றது.

08. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்ப கொங்கிரிட் பெனல்களிலான நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக புதிய தொழில்நுட்ப நிலையான குறைந்த செலவு (ஒரு வீட்டிற்கான செலவு இலங்கை ரூபாவில் 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா வீதம் ) 28,000 கொங்கிரீட் பெனல் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் , இதன் முதற்கட்டத்தில் 7000 வீடுகளை ஓடுகளுடனான வீடுகளாக அமைப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், எதிர்பார்த்த வகையில் திட்டத்திற்கு தேவையான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாமையின் காரணமாக ஆரம்பத்தில் 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக இலங்கை வங்கி ஊடாக காலத்திற்கேற்ற கடன் தொகையை பெற்றுக் கொள்வதற்காக திறைசேரியினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த கடன் தொகையை பயன்படுத்தி 1000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தகாரரான YAPKA Development (Pvt.) Ltd. என்பவருடன் வர்த்தக ஒப்பந்தமொன்று தற்பொழுது கையெழுத்திடப்பட்டுள்ளதாகவும், 2020 பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி சம்பந்தப்பட்ட திட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சமூக ஊக்குவிப்பு தோட்ட அடிப்படை வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

09. தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தலை முறையாக மேற்கொள்ளுதல்

வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுப்பதற்காக 1966ஆம் ஆண்டு இல 37 இன் கீழான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சட்டம் மற்றும் 1982ஆம் ஆண்டு இல 6 இன் கீழான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சட்டத்தின் மானியத்திற்கு அமைவாக தற்பொழுது தனியார் வானொலி ஒலிபரப்பிற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. இதற்கமைவாக இதுவரையில் 27 தனியார் வானொலி ஒலிபரப்பு அனுமதி பத்திரம், மற்றும் 54 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள்; வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும் 18 வானொலி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 28 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பத்திரங்கள் மாத்திரம் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த அனுமதி பத்திரங்களை வழங்குவதற்கான நடைமுறை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற ஊடகங்களில் இரண்டு வகைகளில் பணியாற்றுகின்றமையால் இதற்காக தனியான நிறுவனமொன்று இருப்பதன் தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு அதற்காக ஒளிபரப்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு என்ற பெயரில் திருத்த சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த சட்டமூலத்தை தொடர்ந்தம் மதிப்பீடு செய்து சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காகவும் , வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் இந்த ஆணைக்குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் ஆற்றலை கண்டறிவதற்காகவும் , இத்துறையில் அனுபவமிக்க புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்காகவும் தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. இலங்கையின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னலின் பிரதான கட்டுப்பாட்டு அரங்க கட்டிடத் தொகுதி புதிய தொழில்நுட்பத்திற்கு அமைவாக மேம்படுத்துதல் மற்றும் புதிய இடத்தில் ஸ்தாபித்தல்

இலங்கையின் பிரதான தொலைக்காட்சி அலைவரிசையாக 1979ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டதுடன் 40 வருட காலம் அதன் பிரதான கட்டுப்பாட்டு அரங்கு ஆரம்ப கட்டடத் தொகுதிக்குள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது பிரதான கட்டுப்பாட்டு அரங்கு கட்டிடத் தொகுதிக்கு தேவையான வசதிகளுடனான புதிய கட்டிடமொன்றின் நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இதற்கமைவாக , இந்த அரங்கக் கட்டிடத் தொகுதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட டிஜிட்டல் ஒளிபரப்பிற்காக தேவையான உபகரணங்களைக் கொண்டதாக புதிய கட்டிடமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தகவல் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரின் பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. தேசிய உரக் கொள்கையொன்றை தயாரித்தல்

1988ஆம் ஆண்டு இல 68 இன் கீழான உரம் முறைப்படுத்தல் சட்டத்தின் மூலம் உர இறக்குமதி , தயாரிப்பு வகுத்தல் மற்றும் விநியோக பணிகளை முறையாக முன்னெடுப்பதற்காக தேவையான உடனடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் இதுவரையில் எந்தவித திருத்தத்திற்கும் உட்படுத்தப்படவில்லை. அத்தோடு தற்போதைய சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான வகையில் இந்த சட்டத்தை புதுப்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் , முறையான தேசிய உரக் கொள்கை பிரகடனம் இல்லை என்பதினால் இத்துறையில் முன்னேற்றத்திற்கு பாரிய தடையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைவாக , தேசிய உரக் கொள்கையொன்றுக்கான திருத்த சட்டத்தை வகுப்பதற்காக இத்துறையில் புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும், இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட திருத்த சட்டமூலம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரதும் பொதுமக்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இறுதி திருத்த சட்டமூலத்தை வகுப்பதற்காக மகாவலி , விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

12. குறைந்த வருமானம் கொண்ட பயனாளிகளுக்கான உணவு பாதுகாப்பு

குறைந்த வருமானத்தைக் கொண்ட உணவு பயனாளிகளுக்கு தேவையான உணவு பொருட்களை பெற்றுக் கொடுப்பதன் மூலம் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 'திலிந்துபவ துரங்கிரிமே ஜாதிக வெட சடான' என்ற அடிப்படையில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக அதிமேதகு ஜனாதிபதியினால்; சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கமைவாக , இந்த வேலைத்திட்டம் கீழ்கண்ட வகையில் விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் , உள்ளக வர்த்தக உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் சேமநல அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான தகவல் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
ஊனமுற்ற நபர்கள் , விதவைகள் , நிலையான வருமானமற்ற முதியோர் மற்றும் கடுமையான நோய்த்தாக்கங்களினால் துன்புறுவோர் ஆகியோர் உள்ளடங்கலாக 10 இலட்சம் பயனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள் பொதியொன்றை வழங்குதல்
உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் தேயிலை, நாட்டரிசி, மா (பொதுவானது) , பருப்பு மற்றும் கருவாடு , நெத்தலி , தேசிய ரீதியில் தயாரிக்கப்படும் ரின் மீன் போன்ற உணவு வகைகளை உள்ளடக்கி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை பெறுமதி 1007 ரூபா பெறுமதியுடனான உணவுப் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்காக 500 ரூபாவிற்கு வழங்குதல்
லங்கா சதொச , கூட்டுறவு வர்த்தக வலைப்பின்னல் விசேடமாக கிராமிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட வர்த்தகத்தின் தொடர்புபடுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்.

13. யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் 2 நீர்த்தேக்கங்களின் கரையோரங்களை பாதுகாத்தல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்கான உத்தேச திட்ட பணிக்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

யாழ்ப்பாணம் நகர வலையத்தில் தெரிவு செய்யப்பட்ட நகர சேவைகள் மற்றும் பொது நவநாகரீக இடங்களை மேம்படுத்துவதற்காக மூலோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 55 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக கடனை சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகையில் ஒரு பகுதியை யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் கோயில் குளம் மற்றும் தேவர் குளம் ஆகிய இடங்களின் 2 நீர்த்தேக்கங்களின் கரையோரங்களை பாதுகாத்தல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்கான உத்தேச திட்டத்திற்கு செலுத்துவதற்காக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, மேலே குறிப்பிடப்பட்ட திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தத்திற்கு 113.4 மில்லியன் ரூபாவை (வற் வரியுடன்) இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

14.ஸ்ரேடியம்கம 1000 அலகு வீடமைப்பு திட்டத்தை வகுத்தல் மற்றும் நிர்மானித்தல்

2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைவாக கொழும்பு நகரில் குறைந்த வசதிகளுடனான குடியிருப்புக்களில் வாழும் பொது மக்களின் வீட்டு தேவைக்கான வசதிகளை செய்யும் பொருட்டு 'கொழும்பு நகர்புற மறுமலர்ச்சி திட்டம்' இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியின் ஒரு பகுதி ஆசிய அடிப்படை வசதி முதலீட்டு வங்கியினால் பெறப்படும் கடன் தொகையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுவதுடன் இதன் கீழ் ஸ்ரேடியம்கம வீடமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக ஒரு வீடு 550 சதுர அடியைக் கொண்டதாக 1000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த 1000 வீட்டுத் திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம், பெறுகை மேல்முறையீட்டு சபையின் சிபாரிசுக்கு அமைய 5950.95 மில்லியன் ரூபாவை M/s Access Engineering PLC என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்காக பிரதமர் வழங்கிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

15. ஒபேசேகரபுர (அறுநோதய மாவத்தை, இராஜகிரிய,) 300 வீடுகளுக்கான திட்டத்தை வகுத்தல் மற்றும் நிர்மாணித்தல்

கொழும்பு நகர்ப்புற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி அடிப்படை வசதி முதலீட்டு வங்கியின் கமன் வசதியின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஒபேசேகரபுர வீடமைப்பு திட்டம் 550 சதுர அடிகளைக் கொண்ட 300 வீடுகளைக் கொண்டதாகும். இதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய திட்டமிடப்பட்டு நிர்மாணிக்கும் அடிப்படையில் 1723.35 மில்லியன் ரூபாவுக்கு M\s Subasinghe Contractors (Pvt) Ltd என்ற நிறுவனத்திடம் வழங்குவதற்கு நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் வழங்கிய பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

16. இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தில் பல்லின கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்

இலங்கை பிக்குமார் பல்கலைக்கழகத்தின் பல்லின கட்டட தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய 384.41 மில்லியன் ரூபாவுக்கும் அதற்காக பெறுமதி சேர்க்கப்பட்ட வரியுடனான தொகைக்கு அநுராதபுரம், சிறி தன்த கன்ஸ்ரக்ஷன் வேக்ஸ் மற்றும் டெரிங்டன் கன்ஸ்டக்ஷன் தனியார் நிறுவன வர்த்தக குழுமத்திடம் வழங்குவதற்காக உயர் கல்வி , தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

17. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞானம் மற்றும் சேவை திணைக்களத்துக்கான உத்தேச பல்லின கட்டட தொகுதியை நிர்மாணிக்கும் உபகரணத்தை வழங்குதல்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மனிதநேய மற்றும் சமூக விஞ்ஞானம் மற்றும் சேவை திணைக்களத்துக்கான உத்தேச பல்லின கட்டட தொகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக் குழுவின் சிபாரிசுக்கு அமைய நுகேகொட ஹுகுவெலவில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட இன்ரநெஷனல் கன்ஸ்ரக்ஷன் கொன்ஸ்ரோடியம் (தனியார்) நிறுவனத்திடம் 1183. 86 மில்லியன் ரூபாவை வழங்குதற்காக உயர்கல்வி தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

18. அரசாங்கத்துக்கு உட்பட்ட சொத்துக்களின் அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்தல்

அதிக பெறுமதியைக் கொண்ட சில ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறைக்கு உட்பட்ட சொத்துக்களின் உரிமையினை திறைசேரி, ஊழியர் சேமலாப நிதி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு மற்றும் இலங்கை வங்கி போன்ற நிறுவனங்கள் கொண்டுள்ளன. உதாரணமாக கிறேன்ட் ஆயற், கிறேன்ட் ஒரியன்டல் மற்றும் ஹில்டன் போன்ற ஹோட்ல்கள் மற்றும் நெலும்குளுன, அங்காடி கட்டட தொகுதி முதலானவற்றை சுட்டிக்காட்ட முடியும். இவ்வாறான நிறுவனங்கள் தனி அலகின் கீழ் உட்படுத்துவதன் மூலம் பெறுமதியில் அதிக 'நிஸ்வல தெபள களஓக்' (Premium Real -Estate Portfolio) உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான சொத்துக்களை உள்ளடக்குவதன் மூலம் மேலும் இந்த நிறுவனத்தை எதிர்காலத்தில் விரிவுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. விசேடமாக இவ்வாறான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் மதிப்பு அபிவிருத்திக்காக அரச நிறுவனம் அல்லது அரசாங்கத்தின் கடனைப் பயன்படுத்தி அனுகூலம் அற்றது என்பதினால் உத்தேச நிறுவனம் போன்ற கூடுதலான பெறுமதியைக் கொண்ட நிறுவனத்தின் ஊடாக தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக அமையும். இதற்கு அமைவாக கென்வில் கூட்ட வர்த்தகம் ( க்றேன்ட கயாட்) , ஹொட்டேல் டெவலெபெர்ஸ் தனியார் நிறுவனம் ஹில்டன்) மற்றும் கிரான்ட் ஒறியன்டல் போன்ற நிறுவனங்கள் திறைசேரி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உரிமையைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமாக உட்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top