கொரோனாவால் கைதிகளுக்கு
அடித்திருக்கும்  அதிஸ்டம்

கொரோனா ஈரானில் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டின் சிறைச்சாலைகளில் உள்ள 70,000 கைதிகளையும் விடுவிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் 3,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, தென்கொரியாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஈரானில் மட்டும் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்

உலகின் பல்வேறு நாடுளிலும் கொரோனா பரவியுள்ளதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஈரான் சிறைச்சாலைகளில் உள்ள 70,000 கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வேகமாக பரவும் சூழலில், சிறைச்சாலைக்கும் பரவினால் உயிரிழப்பு அதிகமாகும் என்ற எண்ணத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டின் நீதித்துறை தலைவர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். கைதிகள் திரும்பவும் கைது செய்யப்படுவது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. கைதிகள் விடுதலையாவதால் நாட்டின் பாதுகாப்பை அரசு உன்னிப்பாக கவனித்து வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Iran temporarily releases 70,000 prisoners as coronavirus cases surge





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top