திகாமடுல்ல மாவட்டத்தில்  
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி
தனித்தே போட்டி
பின் வருவோர் களமிறக்கப்படலாம்
  


எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  திகாமடுல்ல மாவட்டத்தில் தனித்தே போட்டியிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எது எப்படியிருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் எவருடனும் கூட்டுச்சேராது தனித்தே போட்டியிடல் வேண்டும் என வேட்பாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

முஸ்லிம் காங்கிரஸுடன் இனைந்து போட்டியிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது கட்சியின் சார்பாக தெரிவு செய்யப்படவிருக்கும் பிரதிநிதியை வேறு கட்சிக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு நாம் தயார் இல்லை என அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தில்   அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக பின் வருவோர் களமிறக்கப்படலாம் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊடகவியலாளரும்,சட்டத்தரணியுமான எம்.எம்.முஸர்ரப் (பொத்துவில்)
மெளலவி எஸ்.எல்.எம். ஹனிபா மதனி             (அக்கரைப்பற்று)
சிரேஸ்ட சட்டத்தரணி கபூர்       ( அட்டாளைச்சேனை, பாலமுனை)
பிரதேச சபை தவிசாளர் எம். ஏ. எம் தாஹிர்   ( நிந்தவூர்)
நகர சபை முன்னாள் மேயர்   சிராஸ் மீராஸாஹீப்  (சாய்ந்தமருது)
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ ரஸ்ஸாக் (ஜவாத் , கல்முனை)
தொழில் அதிபர் சித்தீக்    ( மருதமுனை)
மாகாண சபை முன்னாள் உறுப்பினர் முஹம்மத் மாஹீர்  ( சம்மாந்துறை)
மெளலவி நவ்பர்  (இறக்காமம்)


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top