மசூதியில் மக்கள் கூடுவதை தவிர்க்க
பாகிஸ்தானில் ஊரடங்கு
1.20 கோடி குடும்பத்தினருக்கு அரசு தரப்பில்
தலா 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி ஆரம்பம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஜும்ஆத் தொழுகையில் மக்கள் கூடுவதை தவிர்க்க சிறப்பு ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 24 மணி நேரத்தில் 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4695ஆக உயர்ந்துள்ளது. வைரசால் 66 பேர் இறந்துள்ளதுடன் 45 பேர் அபாய நிலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பஞ்சாப் மாகாணத்தில் பாதிப்பின் அளவு அதிகமாக உள்ளது. இங்கு 2270 பேரும் சிந்து மாகாணத்தில் 1128 பேரும் வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர். அதேபோல் கைபர்-பக்துன்க்வாவில் 620; பலுசிஸ்தானில் 219; கில்கிட்-பல்டிஸ்தானில் 215; இஸ்லாமாபாதில்
107; மற்றும் காஷ்மீரில் 33 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தாக்குதலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட 1.20 கோடி குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் தலா 12 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை அரசு நிறுத்தியது. அதையும் மீறி மக்கள் கூடுவதை தவிர்க்க சிந்து மாகாணத்தில் நேற்று பகல் 12:00 மணி முதல் 3:00 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment