சிரிப்பதற்கு



வெளிநாட்டிலிருந்து எமது நாட்டிலுள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணத்தை உரியவர்களின் கணக்குகளுக்கு வரவு வைப்பதற்கு பொறுப்பாக இருந்த உத்தியோகத்தர் ஒரு தடவை தவறுதலாக வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணத்தொகையை இரண்டு தடவைகள் ஒருவரின் கணக்கில் வரவு வைத்து விட்டார். அப்பணத்தை கணக்கு உரிமையாளரும் எடுத்து விட்டார்.
வழமை போன்று கணக்குகளை பரிசீலிக்கும் போது ந்த விடயம் தெரியவந்தது.
சம்பந்தப்பட்ட கணக்கு உரிமையாளரை வரவழைத்து நடந்த விடயத்தை கூறி நீங்கள் மேலதிகமாக எடுத்த பணத்தை உடனடியாக உங்கள் கணக்கில் மீண்டும் வைப்பில் இடவேண்டும் என்று கேட்கப்பட்டது.
அதற்கு கணக்கு உரிமையாளர் சரி அந்த பணத்தை நான் கட்டிவிடுகிறேன் என்றார்.
கணக்கில் தவறுதலாக வைப்புச் செய்தவருக்கு சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டு பணத்தை எப்போது கட்டுவீர்கள் என்று கேட்டார்.
அதற்கு மேலதிகமாக பணத்தைஎடுத்தவர் வேளாண்மை வெட்டி கட்டி விடுவேன் என்றார்.
அதற்கு பக்கத்தில் இருந்தவர்கள் வேளாண்மை இப்போது என்ன பருவம்? எப்போது வேளாண்மை வெட்டுவீர்கள்? என்று கேட்டனர்.
அதற்கு பணம் வைப்பிலிடுபவர்
இனித்தான் வயல் பார்த்து எடுக்கனும் விதை நெல் வாங்கனும் என்றாரே பார்க்கலாம்.
 *************           ************           ***************

அந்த ஊரில் அவர் ஒரு திடகாத்திரமான மனிதர். அவருக்கு கொஞ்சம் லூஸ் தனம். அவர் யாரிடமாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லியாகவேண்டும் இல்லை என்றால் கல்லெறி , ஏச்சு ,மண்ணெறி எதையாவது எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
 இப்படியான குணமுடைய இவர் ஒரு தடவை காலைச் சாப்பாடு சாப்பிடக்கூடிய கடை ஒன்றுக்கு முன் நின்று கொண்டு சாப்பிட வருவோரிடம் இடியப்பத்திற்கு என்ன கறி நல்லா இருக்கும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
பருப்புக்கறி, தக்காளி சொதி, இறால் கறி, இறைச்சிக் கறி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கறியைக் கூறினர். அந்த சந்தர்ப்பத்தில் ஒரு சட்டத்தரணி அந்தக் கடைக்கு உணவுப் பொருட்களை வாங்க வந்திருந்தார். அவரிடமும் அந்த லூஸ் குணமுள்ள மனிதன் அதே கேள்வியான இடியப்பத்திற்கு என்ன கறி நல்லா இருக்கும் சேர் என்று கேட்டான்.
அவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் இல்லாவிட்டால் அவனால் பிரச்சினை ஏற்படும் என யோசித்த சட்டத்தரணி தக்காளி சொதி நல்லா இருக்கும் என்று கூறிவிட்டார்.

அதற்கு அந்த லூஸ் மனிதன் அதைத்தான் நானும் நினைச்சன் சேர், பார்த்திங்களா உங்கட மூளையும் எண்ட மூளையும் ஒன்றா வேலை செய்கிறதை என்றான்.அது மாத்திரம் அல்லாமல் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அதனை பெருமையாகவும் சொல்லிக் கொண்டிருந்தான்
சட்டத்தரணிக்கு எப்படியிருந்திருக்கும். இது உண்மையாகவே இடம்பெற்ற சம்பவம். ஊரைக் கேட்க வேண்டாம்.

***************          ***************             ******************

நகைக் கடைகள் அதிகம் உள்ள பிரதான தெருவில் இரண்டு வயசான பெண்கள் நடந்து போகும்போது நகைக் கடையில் " வாங்கம்மா, வாங்கம்மா " என்று கூப்பிடும் பையனுக்கு அந்த வயசான பெண்களில் ஒருவர் "நெக்லஸ்" என்று சொல்லுவது காதில் விழுந்துவிட்டது.
உடனே பையன் சுறுசுறுப்பாகி அந்த வயசான இரண்டு பெண்களையும் நகைக்கடைக்குள் எப்படியோ விடாப்பிடியாக அழைத்து விட்டான்  கடையில் இருந்த எல்லோரும் சேர்ந்து அவர்களை கதிரையில் அமரவைத்து விட்டார்கள்.
பின்னர் அவர்களுக்கு குடிப்பதற்கு சோடாவும் பெரிய கிளாஸில் வரவழைத்து கடைக்காரர் கொடுக்கச் சொல்லி கொடுத்துவிட்டார்கள்.

வயதான கிழவிகளும் வெயில் நேரத்தில் தாகத்திற்கு சோடா தருகிறார்களோ நல்லா இருக்கி என்று மடமடவென குடித்து விட்டு நிமிர்ந்திருக்கிறார்கள்.
சோடா குடித்து விட்டார்கள் இனி இவர்கள் நகையை எம்மிடம் தான் எடுப்பார்கள் என்று நினைத்து உம்மா நீங்கள் எப்படியான நெக்லஸ் எடுகப்போகிறீர்கள் என்று கடைக்காரர் கேட்டிருக்கிறார்.
என்ன நெக்லஸா உம்மோ அதுக்கு எங்களிட்ட எங்கிருக்கு காசு மனே என்று வயசான பெண்கள் மூக்கில் கைவைத்து சொல்லி இருக்கிறார்கள்.
அப்போ நீங்கள் இருவரும் நெக்லஸ் என்று பேசிக் கொண்டது? கடைக்கார பையன் பெண்களிடம் கேட்டான்.
அதுவா நாங்க மார்கட்டில தேங்காய் வாங்கினோம் உனக்கு நல்லம் எனக்கிலசு என்றுதான் பேசிக்கிட்டம் அது உங்களுக்கு நெக்லஸ் என்று கேட்டிருக்கு போல மனே.
இதன் பின்னர் நகைக்கடைக்காரர் பையனிடமும் பெண்களிடமும் எப்படி நடந்திருப்பார் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top