அமெரிக்காவில் 50 ஆயிரத்தை
நெருங்கும் கொரோனா பலி
கொரோனாவுக்கு அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,110 பேர் பலியாயினர்; 30,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,110 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 49,769 ஆக உயர்ந்தது. புதிதாக 30,713 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மொத்த பாதிப்பும் 8,79,430 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 85,624 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
வட அமெரிக்காவில் இதுவரை 9,47,120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 53,504 பேர் பலியாகி உள்ளனர். இங்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடா(42,110) உள்ளது.
தென் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. அங்கு 1,03,328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,073 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு பிரேசிலில் அதிகபட்சமாக 49,492 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
0 comments:
Post a Comment