இது எப்படியிருக்கு?
அம்பாறை மாவட்ட மக்களின் களநிலவரம்
குறித்து ஹக்கீம் காணொளி தொழில்நுட்பத்தின்
மூலமாகக் கலந்துரையாடல்
உணவின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு
இது உதவுமா என மக்கள் கேள்வி
CoViD-19 தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்பாறை
மாவட்டத்தின் களநிலவரம் மற்றும் ஊரடங்கு சட்டத்தினால் எதிர்கொள்ளும் சவால்கள்
தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று (9) அம்பாறை மாவட்டத்திலுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும்
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் நேரடி காணொளி தொழில்நுட்பத்தின் (virtual
meeting) மூலம் கலந்துரையாடினார்.
அக்கரைப்பற்றில் இனம்காணப்பட்ட தொற்று நோயாளர் மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இதேபோன்று ஏனைய
மாவட்டங்களுக்கும் இப்படியான கூட்டங்களை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள்ளார்
என அவரின் முகநூலில் தெரிவித்துள்ளார்.
பிரதேச அபிவிருத்திகள் சம்மந்தமாக பல கலந்துரையாடல்கள், கூட்டங்கள் நடத்தி வாக்குறுதிகள் பல வழங்கியது
போன்று இவர்களின் இப்படியான
கலந்துரையாடல்கள் உணவின்றி பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
முகநூல் நண்பர்களும் இக்கலந்துரையாடல் குறித்து இப்படியான
கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்,
Nawfeer Atham Lebbe ஏன் இப்போதே இதைச் செய்கிறீர்கள்? இன்னும் கொஞ்சம் காலம் போனால் கொறோனாவே போய் விடும். அவசரம் வேண்டாம். ஆறுதலாக செய்யுங்கள். தேர்தலும் #பிற்போடப் பட்டு விட்டதே.
Hayathu
Mohideen Abdul Naleem இப்போதாவது
விழித்திருக்கின்ரீர்கள், மிக்க சந்தோசம்.
இம் முயற்சியாவது பத்தோடு, பதினொன்றாக காற்றோடு கலந்துவிடாமல் இருந்தாலே போதுமானது?.
இம் முயற்சியாவது பத்தோடு, பதினொன்றாக காற்றோடு கலந்துவிடாமல் இருந்தாலே போதுமானது?.
0 comments:
Post a Comment