பிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய
கொரோனா உயிரிழப்புக்கள்
- சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே
கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தைக் கடந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 205 நாடுகளுக்கும் மேலாக பரவி தொடர் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ளன.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரித்தனைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உடல்நலம் தேறி சாதாரண மருத்துவ அறையில் தங்கியிருப்பதாகவும் மிக விரைவில் பிரதமர் வாசஸ்தலம் செல்வார் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரித்தானிய காலநிலை வெயிலாக இருப்பதனால் மீண்டும் மக்கள் சுப்பர் மார்க்கெட் இல் அதிகமாக காணக்கூடியதாக இருப்பதாகவும் ஈஸ்டர் தினத்தில் அதிகமாக வெளியில் பீச், சுப்பர்மார்க்கெட் , பார்க் என திரியவேண்டாம் எனவும், திரிவதால் கொரோனா தொற்றுப்ப் பரவல் இன்னும் அதிகமாகி உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் எனவும் சுகாதரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு சுப்பர்மார்க்கெட்டில் பிரித்தானிய முன்னாள் பிரதமர் திரேசா மே அரசு அறிவிப்பின் பிரகாரம் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் காத்திருக்கின்றமையை பிரித்தானிய ஊடகங்கள் படம்பிடித்து காட்டியுள்ள அதே நேரம் மக்கள் சிலர் சுப்பர் மார்க்கெட்டில் எவ்வாறு சமூக இடைவெளியைப் பின்பற்றுகின்றனர் என வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment